இரண்டாவது டெஸ்ட் போட்டி... ஒரே ஒரு சதம்.... விராட் கோலி ரெக்கார்டை முறியடிக்க வாய்ப்பு... ரிஷப் பண்ட் சாதிப்பாரா?

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் 5 சதம் அடித்திருந்தனர். இதில் ரிஷப் பண்ட் முதல் இன்னிங்சில் 134 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 118 ரன்களும் அடித்தார்.

இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் புதன்கிழமை எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து சதம் அடித்துள்ள ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிராக அடுத்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம் அடித்தால் கூட விராட் கோலியின் சாதனையை முறியடித்து விடுவார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக விராட் கோலி ஐந்து சதம் அடித்து உள்ள நிலையில் தற்போது இருவரும் சமநிலையில் உள்ளதுடன், இங்கிலாந்துக்கு எதிராக முன்னாள் கேப்டன் அசாருதீன் 6 சதம் அடித்திருக்கின்றார். 

முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கரும், ராகுல் டிராவிட்டும் 7 சதம் அடித்திருக்கிறார்கள். இதன் காரணமாக பந்த் சதம் சதமாக இங்கிலாந்துக்கு எதிராக அடித்தால் முதல் இடத்தை பிடிக்க கூட வாய்ப்பு இருக்கின்றது. 

இதேபோன்று இங்கிலாந்து மண்ணில் ரிஷப் பண்ட் 10 டெஸ்ட் போட்டிகளில் 808 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 42 ஆகும். இதில் நான்கு சதமும், இரண்டு அரை சதமும் அடங்கும். 

இந்த நிலையில், ரிஷப் பண்ட் சதம் அடித்தால் இங்கிலாந்து மண்ணில் தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த ஏழாவது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு இந்த மைல் கல்லை ராகுல் டிராவிட் நிலையில் தற்போது ரிஷப் பண்டுக்கும் அந்த வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.