2026 புத்தாண்டில் மகாலட்சுமி ராஜயோகம்: மேஷம், ரிஷபம், தனுசு ராசிக்காரர்களுக்கு பண மழை
குறிப்பாக ஜனவரி 18 அன்று செவ்வாய் கிரகம் மற்றும் சந்திரன் மகர ராசியில் சேர்ந்து மகாலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகின்றன. இந்த யோகம், செல்வம் மற்றும் நிதி முன்னேற்றத்தில் சிறந்த அதிர்ஷ்டத்தை சில ராசிக்காரர்களுக்கு வழங்கும்.
ஜோதிட கணிப்புகளின் படி, 2026 ஆம் ஆண்டின் தொடக்கம் மிகவும் சிறப்பானது. புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரியில் உருவாகும் பல்வேறு சுப மற்றும் ராஜயோகங்கள், மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளுக்கும் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும்.
குறிப்பாக ஜனவரி 18 அன்று செவ்வாய் கிரகம் மற்றும் சந்திரன் மகர ராசியில் சேர்ந்து மகாலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகின்றன. இந்த யோகம், செல்வம் மற்றும் நிதி முன்னேற்றத்தில் சிறந்த அதிர்ஷ்டத்தை சில ராசிக்காரர்களுக்கு வழங்கும்.
மேஷம்:
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் தோன்றுகிறது. இதனால் வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். வேலை தேடுகிறவர்கள் நல்ல வேலை பெறுவார்கள், பணிபுரிபவர்கள் புதிய பொறுப்புக்கள் பெற்றுக் கொள்ளுவர். முதலீடுகளில் லாபம், நீண்ட கால வேலைகளில் வெற்றி மற்றும் கூட்டு தொழில் முனைப்பில் நல்ல லாபம் கிடைக்கும். தந்தையுடனான உறவும் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் செவ்வாய் சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்கள், ஆன்மீக ஆர்வம், தொழில் லாபம், பதவி உயர்வு, நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறுதல் போன்ற பல சாதக மாற்றங்கள் ஏற்படும்.
தனுசு:
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் செவ்வாய் சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் தோன்றுகிறது. எதிர்பாராத நிதி ஆதாயங்கள், பண சேமிப்பு, தொழில் முன்னேற்றம், சிக்கிய பணம் கைக்கு வரல், நிதி நிலை உயர்வு மற்றும் முக்கிய வேலைகளை வெற்றிகரமாக முடிப்பது போன்ற பல வாய்ப்புகள் ஏற்படும்.
இந்த யோகத்தின் மூலம் மேஷம், ரிஷபம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் 2026 புத்தாண்டின் தொடக்கத்தில் பண, செல்வம் மற்றும் முன்னேற்றத்தில் சிறந்த அதிர்ஷ்டத்தை அனுபவிக்க வாய்ப்பு உள்ளது.
