இங்கிலாந்தின் கனவை தகர்த்த இளம் வீரர்... தெறிக்கவிட்ட இந்திய அணி... எதிர்பாராத ட்விடஸ்!
நான்காவது நாள் ஆட்டத்திலும் அவர் 2 விக்கெட்களை வீழ்த்திய நிலையில், இரண்டாவது இன்னிங்க்ஸில் மொத்தம் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப்பின் அபார பந்துவீச்சால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவி இருக்கின்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறிய இங்கிலாந்து அணி போட்டியை டிரா செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில், ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியவுடன் இரண்டு முக்கிய விக்கெட்டுகளைஆகாஷ் தீப் சாய்த்தார்.
நான்காவது நாள் ஆட்டத்திலும் அவர் 2 விக்கெட்களை வீழ்த்திய நிலையில், இரண்டாவது இன்னிங்க்ஸில் மொத்தம் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 587 ரன்களை இந்திய அணி எடுத்த நிலையில், அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி 427 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த இலக்கை எட்ட முடியாது என்பதை உணர்ந்த இங்கிலாந்து அணி டிரா செய்ய திட்டமிட்ட நிலையில், நான்காவது நாள் முடிவிற்குள் அந்த அணி 72 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியவுடன் ஒல்லி போப் விக்கெட்டை ஆகாஷ் தீப் வீழ்த்தினார். அடுத்த இரண்டு ஓவர்கள் கழித்து அவர் ஹாரி ப்ரூக் விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இதை அடுத்து இங்கிலாந்து அணி 22வது ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. முதல் இன்னிங்ஸிலும் ஆகாஷ் தீப் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர் 4 விக்கெட்களை வீழ்த்தியது ஆகாஷ் தீப் மீதான நம்பிக்கையை அதிகரித்து உள்ளதுடன், அவருக்கு மீதமுள்ள போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.