இந்த தகுதி இருந்தால் பிரித்தானியாவில் 3 ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை வாய்ப்பு

பிரிட்டன் அரசு அதிக வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான குடிவரவு கொள்கையில் பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது. புதிய திட்டத்தின் கீழ், வருடத்திற்கு £125,000-க்கும் மேல் சம்பாதிக்கும் நபர்கள் வெறும் 3 ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமைக்கு (Indefinite Leave to Remain) விண்ணப்பிக்கலாம்.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய குடிவரவு சீர்திருத்தம் என இதை உள்துறை அமைச்சகம் வர்ணிக்கிறது.

புதிய பாதைக்கு தகுதி பெற: நிலையான வேலைவாய்ப்பு, குற்றவியல் பதிவில்லாமை, மேம்பட்ட ஆங்கில அறிவு, அரசின் நலனுதவிகளை கோராமை என்கிற நிபந்தனைகள் கட்டாயமாக இருக்கும்.

பொதுவாக, தற்போதைய விதிகளின் கீழ் நிரந்தர குடியுரிமை பெற 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயர்தர திறனாளிகளை விரைவாக குடியேற்ற முயற்சிதானாக இந்த புதிய கொள்கை அமைகிறது.

சுகாதாரத் துறையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 5 ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை பெறலாம். ஆனால், குறைந்த சம்பளத்தில் உள்ள சுமார் 6 லட்சம் சுகாதார பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் அதிகபட்சம் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அதே நேரத்தில், சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் மற்றும் விசா காலாவதியானவர்கள் 30 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிவரும்.

2021 முதல் நாட்டுக்குள் நுழைந்துள்ள 2 மில்லியன் புலம்பெயர்ந்தோருக்கு இந்த மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், 2030க்குள் 1.6 மில்லியன் பேர் குடியுரிமைக்கு தகுதி பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் அரசு, உயர்வருமான தொழில்முனைவோர் மற்றும் திறமையான நிபுணர்களை ஈர்க்கும் நோக்கத்துடன், பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் வகையில் இந்த புதிய குடிவரவு வழியை அறிமுகப்படுத்தியுள்ளது.