மீண்டும் ஐபிஎல் எப்போது நடைபெறும்? பிசிசிஐ அறிக்கை... முழு விபரம் இதோ!

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ்அணிகளுக்கு இடையில் தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

மீண்டும் ஐபிஎல் எப்போது நடைபெறும்? பிசிசிஐ அறிக்கை... முழு விபரம் இதோ!

இறுதிக் கட்டத்தை எட்டிய ஐபிஎல் 18ஆவது சீசன் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றை உறுதி செய்துவிட்ட நிலையில்,பஞ்சாப் கிங்ஸ் பிளே ஆப்பை உறுதி செய்ய, வாய்ப்பு இருந்தது.
 
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ்அணிகளுக்கு இடையில் தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணி, 10.1 ஓவர்கள் முடிவில் 122/1 ரன்களை எடுத்திருந்த நிலையில், எல்லையில் போர் பதற்றம் அதிகரித்த நிலையில் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இருப்பினும், இரு அணிகளுக்கும் புள்ளிகளை பகிர்ந்து அளிக்கவில்லை. இதன்மூலம், ஆட்டம் வேறு ஒரு நாளில் தொடரும்.

இந்நிலையில், எல்லையில் பதற்றம் நீடித்து வருவதால், வெளிநாட்டு வீரர்களை, அவரவர் நாட்டு கிரிக்கெட் வாரியம் திரும்ப அழைக்க நடவடிக்கை எடுத்த நிலையில், ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான எஞ்சிய போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 

கொரோனா காலத்தில் கூட, முதல்பாதி முடிந்து, அடுத்த பாதி ஆட்டங்கள் செப்டம்பர் இறுதியில் துவங்கியது. அதேபோல், எஞ்சிய லீக் போட்டிகள், வரும் செப்டம்பர் இறுதியில் கூட துவங்கி நடைபெறலாம்.