ஐபிஎல் எப்போது தொடங்கும்? மீண்டும் நடக்க உள்ள போட்டி... பிசிசிஐ எடுத்துள்ள தீர்மானம்!
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் ஏப்பட்டுள்ளதால், ஐபிஎல் தொடர் எப்போது துவங்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் ஏப்பட்டுள்ளதால், அண்மையில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் எப்போது துவங்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதல் காரணமாக 2025 ஐபிஎல் தொடர் ஒரு வார காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ தெளிவாகக் கூறியிருந்தது.
இந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தாக்குதல்களை நிறுத்தி வைக்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடர் அடுத்த வாரம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு ஐபிஎல் போட்டிக்கும் ஒளிபரப்பின் மூலம் மட்டும் சுமார் 200 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் நிலையில், ஐபிஎல் போட்டிகளை நடத்துவதை தாமதம் செய்தால் அல்லது பின்னர் போட்டிகளை நடத்த முடியாமல் போனால் பெரும் இழப்பு ஏற்படும்.
ஜூன் இரண்டாவது வாரம் முதல் இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே ஐபிஎல் தொடரை நடத்தியாக வேண்டும்.
இதனால், தான் பிசிசிஐ மீதமுள்ள 17 ஐபிஎல் போட்டிகளையும் விரைவாக நடத்தி முடிக்க, பிசிசிஐ அவசரமாக திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.
பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி, மீண்டும் முதலில் இருந்து நடத்தப்படும் என கூறப்படுகிறது.
அந்தப் போட்டியுடன் சேர்த்து 17 போட்டிகள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மீதமுள்ளதுடன், அதற்கான அட்டவணை மற்றும் மைதானங்கள் தொடர்பில் ஐபிஎல் நிர்வாகம் விரைவில் தீர்மானிக்க வேண்டும்.
தொடர்ந்து மற்ற ஐபிஎல் அணிகள் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ததுமன், அதன் பிறகு ஐபிஎல் தொடர் துவங்கும்.
வீடுகளுக்கு சென்றுள்ள இந்திய வீரர்கள் அனைவரும் அட்டவணை வெளியானவுடன் தங்கள் அணிகளுடன் இணைவார்கள். ஆனால் வெளிநாட்டு வீரர்கள் பலரும் தமது நாடுகளுக்கு திரும்பிய நிலையில், அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைப்பது சற்று சிக்கலானதாக இருக்கும்.