இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்... உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்வது கடினம்.. ஐசிசி வைத்த ஆப்பு!

அதன்படி இந்திய அணி 2019 ஆம் ஆண்டும் 2023 ஆம் ஆண்டும் என தொடர்ந்து இரண்டு முறை பைனல் வரை சென்று இந்தியா தோல்வியை தழுவியது.

Dec 30, 2023 - 13:40
இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்... உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்வது கடினம்.. ஐசிசி வைத்த ஆப்பு!

ஒவ்வொரு இரண்டு ஆண்டிலும் பிரிக்கப்பட்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படும். இதில் யார் முதல் இரண்டு இடங்களை புள்ளி பட்டியலில் பிடிக்கிறார்களோ அவர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள்.

அதன்படி இந்திய அணி 2019 ஆம் ஆண்டும் 2023 ஆம் ஆண்டும் என தொடர்ந்து இரண்டு முறை பைனல் வரை சென்று இந்தியா தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் மூன்றாவது முறையாக இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஃபைனலுக்கு இந்தியா செல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், ஆரம்பமே இந்தியாவுக்கு ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி அடைந்த நிலையில் ஆறாவது இடத்திற்கு இந்தியா சரிந்துள்ளதுடன், மேலும் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக ஐசிசி 2 புள்ளிகளை குறைத்து இருக்கிறது.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஓவர்கள் வீச இந்தியா அதிக நேரம் எடுத்துக் கொண்ட குற்றச்சாட்டு காரணமாக இந்தியாவுக்கு இரண்டு புள்ளிகள் குறைக்கப்பட்டு இருக்கிறது. 

இன்னும் இந்தியா நிறைய போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதால் இந்த புள்ளி பட்டியல் பல மாற்றங்களை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. 

தென்னாபிரிக்க அணி முதல் இடத்திலும்,நியூசிலாந்து அணி இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலிய அணி மூன்றாம் இடத்திலும் வங்கதேச அணி 4வது இடத்திலும், பாகிஸ்தான் அணி ஐந்தாவது இடத்திலும், இந்திய அணி ஆறாவது இடத்திலும் உள்ளது. 

கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த புள்ளி பட்டியலில் மேலே செல்ல முடியும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!