எனக்கு வயதாகி விட்டதை உணர்ந்தேன்.... ஓய்வு குறித்து தோனி சொன்ன பதில்.. இனி ருதுராஜ்க்கு கவலையில்லை!

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் அணியை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியுடன் தொடரை நிறைவு செய்தது. 

எனக்கு வயதாகி விட்டதை உணர்ந்தேன்.... ஓய்வு குறித்து தோனி சொன்ன பதில்.. இனி ருதுராஜ்க்கு கவலையில்லை!

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் அணியை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியுடன் தொடரை நிறைவு செய்தது. 

அணியின் கேப்டன் தோனிக்கு தற்போது 45 வயதாகும் நிலையில் அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது.  போட்டிக்குப் பிறகு பேசிய தோனி, “இந்த தொடர் எங்களுக்கு நன்றாக அமையவில்லை. நாங்கள் எதிர்பார்த்த படி இந்த சீசன் இல்லை. இன்றைய ஆட்டம் மிகவும் பிரமாதமாக இருந்தது.

இந்த சீசனில் எங்கள் களத்தடுப்பு சரியில்லை. எனினும், இன்று அனைவரும் சிறப்பாக களத்தடுப்பில் ஈடுபட்டனர். என்னுடைய ஓய்வு முடிவு குறித்து நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. அதற்கு இன்னும் நான்கு ஐந்து மாதம் நேரம் இருக்கிறது. 

உடல் தகுதி எவ்வாறு இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். கிரிக்கெட் செயல்பாடுகள் சரியில்லை என கூறி வீரர்கள் ஓய்வு பெற தொடங்கினால், சில வீரர்கள் 22 வயதிலேயே ஓய்வை முடிவை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

நான் ராஞ்சிக்கு செல்ல போகிறேன். என் கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவுதான் முடிந்துவிட்டது என்றும் சொல்லவில்லை. அடுத்த சீசனுக்கு திரும்பி வருவேன் என்று உத்தரவாதமும் கொடுக்கவில்லை.

இந்த சீசன் தொடக்கத்தில் நாங்கள் சென்னையில் நான்கு போட்டிகள் விளையாடினோம். அதில் இரண்டாவதாக பேட்டிங் செய்தோம். ஆனால் தனிப்பட்ட முறையில் முதல் இன்னிங்சில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது என்று நான் நினைத்தேன்.

எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களும் இந்த சீசனில் சரியாக விளையாடவில்லை. ரன்களை குவித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். அணியில் இருந்த ஓட்டைகளை அடைத்துவிட்டோம். அடுத்து சீசனில் ருதுராஜ்க்கு எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை. 

14 வயது வீரரான வைபவ் என்னுடைய காலில் விழுந்த போது எனக்கு திடீரென்று நான் வயதாகி விட்டேனோ என்று தோன்றியது. ஆண்ட்ரே சித்தார்த் என்ற வீரரிடம் வயதை கேட்டேன். என்னை விட 25 வயது குறைந்தவராக அவர் இருக்கிறார். அப்போதுதான் நமக்கு வயதாகி விட்டது என்று நான் உணர்ந்தேன் என தோனி கூறி உள்ளார்.