கோலி, ராகுல் சாதனையை உடைத்து தெறிக்க விட்ட ருதுராஜ்... டி20யில் அதிரடி சாதனை! 

விராட் கோலி, கே எல் ராகுல் ஆகியோரை விட விரைவாக 4000 டி20 ரன்களை கடந்துள்ள ருதுராஜ் சர்வதேச அளவில் ஐந்தாவது இடத்தை பிடித்து தெறிக்க விட்டுள்ளார்.

Dec 2, 2023 - 12:18
கோலி, ராகுல் சாதனையை உடைத்து தெறிக்க விட்ட ருதுராஜ்... டி20யில் அதிரடி சாதனை! 

இந்தியா மற்றம் ஆஸ்திரேலிய அணிக்கு இடையிலான நான்காவது டி20 போட்டியில் விராட் கோலி, ராகுல் சாதனையை முறியடித்துன்ன ருதுராஜ் கெய்க்வாட், புதிய டி20 சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

அதாவது, நேற்றைய போட்டியின்போத, ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் 4000 ரன்களை கடந்து ருதுராஜ் கெய்க்வாட் மைல்கல் சாதனை படைத்துள்ளதுடன், அதி வேகமாக 4000 டி20 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

விராட் கோலி, கே எல் ராகுல் ஆகியோரை விட விரைவாக 4000 டி20 ரன்களை கடந்துள்ள ருதுராஜ் சர்வதேச அளவில் ஐந்தாவது இடத்தை பிடித்து தெறிக்க விட்டுள்ளார்.

இந்திய அணியில் அண்மை காலமாக வாய்ப்பு பெற்று வரும் ருதுராஜ் கெயிக்வாட்,  முன்னதாக ஐபிஎல் தொடரில் கடந்த சில ஆண்டுகளாக ரன் வேட்டை நடத்தி வருகிறார்.

பாகிஸ்தான் சாதனையை உடைத்த இந்தியா.. வரலாற்றிலேயே முதலிடம்... டி20 போட்களில் அதிக வெற்றி!

இந்த நிலையில், தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் சதம் அடித்து இருந்த ருதுராஜ், நான்காவது டி20 போட்டியில் 20 ரன்கள் சேர்த்த போது அவர் ஐபிஎல், சர்வதேச டி20 உள்ளிட்ட ஒட்டுமொத்த டி20 போட்டிகளிலும் சேர்த்து 4000 ரன்களை கடந்தார்.

அவர் இந்த மைல்கல்லை 116 இன்னிங்ஸில் கடந்தார். அதன் மூலம், குறைந்த இன்னிங்க்ஸில் 4000 டி20 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இந்திய அளவில் கேள் ராகுல் மற்றும் விராட் கோலியை முந்தி முதல் இடத்தை பிடித்தார். 

ராகுல் 117 இன்னிங்ஸிலும், விராட் கோலி 138 இன்னிங்க்ஸிலும் இந்த மைல்கல்லை எட்டி இருந்தனர். சர்வதேச அளவில் கிறிஸ் கெயில் 107 இன்னிங்ஸ், ஷான் மார்ஷ் 113 இன்னிங்ஸ், பாபர் அசாம் 115 இன்னிங்ஸ், டெவான் கான்வே 116 இன்னிங்ஸில் இதே மைல்கல்லை எட்டி உள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அத்துடன், டி20 தொடரை 3 - 1 என இந்தியா கைப்பற்றி உள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!