திடீரென கழற்றிவிடப்பட்டது ஏன்... இந்திய அணியில் இடமில்லை.. ஒருமுறை வாய்ப்பு கொடுங்க.. புலம்பும் புஜாரா!
இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை இதுவரை இந்திய அணி கைப்பற்றியதில்லை என்ற நிலையில், இம்முறை அந்த வரலாற்றை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதனால் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உள்ளிட்டோர் டெஸ்ட் தொடரை வெற்றிப்பெறுவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை இதுவரை இந்திய அணி கைப்பற்றியதில்லை என்ற நிலையில், இம்முறை அந்த வரலாற்றை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராகி வருவதாக தெரிவித்துள்ள புஜாரா, இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள தன்னை திடீரென கழற்றிவிடப்பட்டது பற்றியும் புலம்பி இருக்கிறார்.
இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்காதது ஏமாற்றம் தான். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 100 போட்டிகளுக்கும் மேலாக விளையாடிய ஒருவர், தற்போது அந்த அணியில் இல்லை. அதற்காக மீண்டும் இந்திய அணிக்காக விளையாடும் எனது உழைப்பையும், முயற்சியையும் கைவிடப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
கிரிக்கெட் மீது கொண்ட காதல் காரணமாக எப்போதும் தயாராகவே இருக்கிறேன். எந்த வாய்ப்பையும் எதிர்பார்க்காமல், ஒவ்வொரு நாளும் கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன்.
இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய அணிக்கு எனது தேவை இருந்தால், வாய்ப்பு கிடைத்தால், தயாராகவே இருக்கிறேன். அதற்காக ஃபிட்னஸ் மற்றும் கிரிக்கெட் பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறேன்.
ஆனால், இந்திய அணியில் இடம்பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. வாய்ப்பு கிடைத்தால், எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராகவே இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.