கோலி, ரோகித் கடைசி ஆட்டம்: கண்ணீர் விட்டு அழுத ஆஸ்திரேலிய வர்ணனையாளர்; நடந்தது என்ன!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் பங்கேற்று விளையாடினர். இந்த ஜோடி கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு வந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் பங்கேற்று விளையாடினர். இந்த ஜோடி கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு வந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று இருக்கும் என்று கருதப்படுகிறது.
குறிப்பாக சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்த ஜோடி இணைந்து 168 ரன்களைச் சேர்த்து ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. இதில் ரோகித் சர்மா 125 பந்துகளில் 121 ரன்களும், விராட் கோலி 81 பந்துகளில் 74 ரன்களும் அடித்திருந்தனர். இந்திய அணி வெற்றி பெற்றதும் பல ரசிகர்கள் எழுந்து நின்று அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
அப்போது சென் கிரிக்கெட் (Sen Cricket) என்ற சேனலில் பணியாற்றிய ஆஸ்திரேலிய வர்ணனையாளர் ஒருவர், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை இனி ஆஸ்திரேலியாவில் பார்க்கப் போவதில்லை என நினைத்து கண்ணீர் விட்டு அழுதார். இந்த உணர்ச்சிமயமான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த ஒருநாள் தொடரில் ஒரு அரை சதம் மற்றும் ஒரு சதம் அடித்ததால் ரோகித் சர்மா தொடர் நாயகன் விருதை வென்றார். மறுமுனையில் விராட் கோலி முதல் இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆன நிலையில், மூன்றாவது போட்டியில் தன்னுடைய தலைமையை நிரூபித்து, இந்திய அணியில் தமக்கு இடம் இன்னும் இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
தற்போது இரு அணிகளும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டி புதன்கிழமை விளையாடுகிறது. 2027 உலக கோப்பையில் விராட் கோலி, ரோஹித் சர்மாவும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடருக்குப் பிறகு, அடுத்ததாக இனி வரும் நவம்பர் 30-ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இருவரும் கிரிக்கெட் களத்திற்குத் திரும்புவார்கள் என தெரிகிறது.
