6 பந்தில் 6 சிக்ஸர்.. 12 பந்தில் 67 ரன்கள் குவித்து அசத்தல் வெற்றி!
முதலில் களமிறங்கிய குவைத் அணியில், அனைத்து பேட்டர்களும் 200+ ஸ்ட்ரைக் ரேட்டில்தான் விளையாடினார்கள். ஓபனர் அன்டன் இத்ரீஸ் 8 பந்துகளில் 17 ரன்களை அடித்த நிலையில், அதன்பிறகு, மீத் பாவ்சர் 14 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்ஸர்கள் உட்பட 40 ரன்களை குவித்து அசத்தினார்.
ஹாங் ஹாங் சிக்ஸஸ் தொடரில் குரூப் சி பிரிவில் இடம்பெற்ற பாகிஸ்தான், குவைத் அணிகள் லீக் போட்டியில் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய குவைத் அணியில், அனைத்து பேட்டர்களும் 200+ ஸ்ட்ரைக் ரேட்டில்தான் விளையாடினார்கள். ஓபனர் அன்டன் இத்ரீஸ் 8 பந்துகளில் 17 ரன்களை அடித்த நிலையில், அதன்பிறகு, மீத் பாவ்சர் 14 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்ஸர்கள் உட்பட 40 ரன்களை குவித்து அசத்தினார்.
அடுத்து, இறுதிக் கட்டத்தில், பிலால் தஹிர் 6 பந்துகளில் 4 சிக்ஸர்கள் உட்பட 24 ரன்களை அடித்த நிலையில், உஸ்மான் படேல் 9 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 31 ரன்களை குவித்தார்.
இப்படி, குவைத் அணி, மொத்தம் 5 பவுண்டரி, 14 சிக்ஸர்களை விளாசித் தள்ளியது. இதனால், 6 ஓவர்களில் 123/2 ரன்களை எடுத்தார்கள்.
இலக்கை துரத்திக் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், முகமது ஷாக்சாத் 14 (8), அப்துல் சமத் 0 (1) ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆகி ஷாக் கொடுத்தனர். மற்றொரு ஓபனர் கவாஜா நபே 11 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 25 ரன்களை அடித்தார்.
இறுதிக் கட்டத்தில், 12 பந்துகளில் 67 ரன்களை அடிக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில், பாகிஸ்தான் அணி இருந்தது. அதாவது, 11 சிக்ஸர்களை அடித்தாக வேண்டிய நிலைமை இருந்தது. இந்நிலையில், யாஷின் படேல் வீசிய 5ஆவது ஓவரில், அப்பாஸ் அப்ரீதி அபாரமாக செயல்பட்டு முதல் 6 பந்தில் 6 சிக்ஸர்களை விளாசினார். கடைசி பந்து நோபாலாக மாற, அதில், அப்ரீதி ஒரு ரன்னை மட்டும்தான் எடுத்தார்.
அதன்பிறகு கடைசி ஓவருக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. அப்போதும், அப்ரீதி காட்டடி அடித்து, முதல் 5 பந்துகளில் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரி உட்பட 28 ரன்களை எடுத்தார். அடுத்து, கடைசி பந்தில் சிங்கில் எடுத்ததால், பாகிஸ்தான் அணி, 6 ஓவர்களில் 124 ரன்களை எடுத்து, த்ரில் வெற்றியைப் பெற்றது.
அப்பாஸ் அப்ரீதி, 12 பந்துகளில் ஒரு பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உட்பட 55 ரன்களை எடுத்தார். அவருக்கு துணையாக விளையாடிய ஷஹித் அஜிஸ் அதற்குமுன் 5 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 23 ரன்களை எடுத்து வெற்றிக்கு உதவினார்.
குரூப் டி பிரிவில் ஹாங், ஹாங், வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் இடம்பெற்றன. இதில், ஹாங் ஹாங் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியைப் பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த இலங்கை அணி, படுமோசமாக சொதப்பி தோல்வியை சந்தித்தது.
முதலில் களமிறங்கிய இலங்கை அணி, 6 ஓவர்களில் 79/5 ரன்களை அடித்த நிலையில், இலக்கை துரத்திக் களமிறங்கிய ஹாங் ஹாங் அணி, 3.4 ஓவர்களிலேயே 80/2 ரன்களை குவித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
