இரண்டு நட்சத்திர வீரர்களை அணியில் இருந்து தூக்க கம்பீர் முடிவு? வெளியான தகவல்!
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணியானது இங்கிலாந்து செல்லவுள்ளதுடன், இந்தத் தொடர் ஜூன் 20ஆம் தேதி முதல் நடைபெறும்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து, இரண்டு நட்சத்திர வீரர்களை நீக்குமாறு பிசிசிஐ மீட்டிங்கில் கம்பீர் சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணியானது இங்கிலாந்து செல்லவுள்ளதுடன், இந்தத் தொடர் ஜூன் 20ஆம் தேதி முதல் நடைபெறும்.
இந்திய அணியானது, கடைசியாக 2007ஆம் ஆண்டில்தான் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. விராட் கோலி தலைமையில் கடைசியாக இங்கிலாந்து சென்ற இந்திய அணி, முதல் நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்ததுடன், கடைசி டெஸ்டில் தோற்று, தொடரை சமன் செய்தது.
18 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு? முக்கிய வீரர்கள் இல்லை... நீக்கப்பட்ட வீரருக்கு மீண்டும் இடம்!
நடப்பு இங்கிலாந்து டெஸ்ட் தொடரானது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027ல் இந்தியாவுக்கு முதல் டெஸ்ட் தொடர் என்ற நிலையில், தொடரை இழந்தால், ஆரம்பத்திலேயே பின்னடைவு ஏற்படும்.
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வு அறிவித்துவிட்டதால், இளம் வீரர்களை வைத்து விளையாட வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது.
இத்தொடருக்காக இளம் பேட்டிங் வரிசையை பிசிசிஐ தேர்வுக்குழு, தேர்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இந்திய அணியில் இருந்து, பார்ம் அவுட்டில் இருக்கும் இரண்டு ஸ்டார் வீரர்களை நீக்க வேண்டும் என தலைமை பயிற்சியாளர் கம்பீர், பிசிசிஐ தேர்வுக்குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளாராம்.
ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த், முகமது ஷமி ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை என்றும், இவர்களுக்கு மாற்று வீரர்கள் டெஸ்ட் அணியில் இருக்கிறார்கள் என்றும் ஷமிக்கு மாற்றாக அர்ஷிப் சிங், ஹர்ஷித் ராணா போன்றவர்கள் இருக்கிறார்கள் என்றும், ரிஷப் பந்திற்கு மாற்றாக துரூவ் ஜோரல் இருப்பதுடன், பேக்கப்பிற்காக கே.எல்.ராகுலும் இருக்கிறார் என்று கம்பீர் கூறியுள்ளார்.
அதனால், இவர்களை நீக்கிவிட்டு, பார்மில் இருக்கும் வீரர்களை அணியில் சேர்த்தால் மட்டுமே, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட முடியும் என்பதால், பிசிசிஐ தேர்வுக்குழு இதுகுறித்து பரிசீலிக்க வேண்டும் என பிசிசிஐ மீட்டிங்கில் கம்பீர் கூறி இருக்கின்றார்.