24 வருடங்களின் பின்னர் யுவராஜ் சிங்கின் ரெக்கார்டை உடைத்த இளம் வீரர்.... அதிரடி ஆட்டம்!

கூச் பெஹார் இறுதிப் போட்டியில் அடிக்கப்பட்ட மிகப் பெரிய ஸ்கோர் சாதனையானது இது 24 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்தது.

24 வருடங்களின் பின்னர் யுவராஜ் சிங்கின் ரெக்கார்டை உடைத்த இளம் வீரர்.... அதிரடி ஆட்டம்!

1999ஆம் ஆண்டில் யுவராஜ் சிங் துடுப்பாட்டத்தில் படைத்த பிரம்மாண்ட சாதனையை 24 ஆண்டுகளுக்கு பின்னர்  18 வயதுடைய பிரகார் சதுர்வேதி என்ற இளம் வீரர்,  பிசிசிஐ நடத்தும் கூச் பெஹார் கோப்பை எனும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் உடைத்து எறிந்து இருக்கிறார்.

பீகார் - பஞ்சாப் அணிகள் இடையிலான அண்டர் 19 கிரிக்கெட் தொடரான கூச் பெஹார் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக ஆடிய யுவராஜ் சிங் 358 ரன்கள் குவித்தார். 

கூச் பெஹார் இறுதிப் போட்டியில் அடிக்கப்பட்ட மிகப் பெரிய ஸ்கோர் சாதனையானது இது 24 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், கர்நாடகா - மும்பை அணிகளுக்கு இடையேயான கூச் பெஹார் இறுதிப் போட்டியில் 638 பந்துகளில் 404 ரன்கள் குவித்த பிரகார் சதுர்வேதி, அதன் மூலம் யுவராஜ் சிங்கின் 358 ரன்கள் சாதனையை முறியடித்தார்.

பிரகார் சதுர்வேதி  அடித்த 46 ஃபோர், 3 சிக்ஸ்சர் காரணமாக கர்நாடகா அணி 890 ரன்கள் குவித்தது. 

மும்பை அணி 380 ரன்கள் மட்டுமே குவித்தது, 510 ரன்கள் முன்னிலை பெற்ற கர்நாடகா. பின்னர் போட்டி டிராவில் முடிந்ததை அடுத்து முன்னிலை பெற்ற அடிப்படையில் கர்நாடகா அணி இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது.

கூச் பெஹார் இறுதிப் போட்டியில் 400 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் செய்துள்ளார் பிரகார் சதுர்வேதி. 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...