உயிரிழந்த தோழிக்கு உதட்டிலேயே முத்தம் கொடுத்த யாஷிகா ஆனந்த்.. இன்ஸ்டாகிராமில் குமுறல்!
கடந்த 2021ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்தபோது யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக அறியப்படும் நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்தபோது யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
அந்த விபத்தில் அவரது தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமானார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற விபத்தில் தனது தோழியை இழந்தது தொடர்பாக யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவானது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அவரது பதிவில், " நான்கு வருடங்கள் கடந்துவிட்டன, ஆனால் உனது இழப்பு இன்னும் புதிதாகவே வலிக்கிறது. ஒவ்வொரு நாளும் நீ இங்கு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் போராடுகிறேன்.
நாம் ஒன்றாக இருந்த நினைவுகளில் சிக்கிக்கொண்டு, அவற்றை மீண்டும் மீண்டும் நினைத்து, நீ இங்கு இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பாய், என்ன செய்திருப்பாய் என கற்பனை செய்து பார்க்கிறேன்.
உனது இடைவிடாத பேச்சுகள், உனது சிரிப்பு, என்னை எப்போதும் சிரிக்க வைத்த உனது பதில்கள், எல்லாமே இப்போது தொலைதூர கனவு போல மாறிவிட்டது.
முடிந்தால் காலத்தை திருப்பி, அந்த விபத்து நடக்காதபடி எல்லாவற்றையும் சரி செய்ய விரும்புகிறேன். 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற உதவியதில் தொடங்கிய தொடங்கி, நீ என் வாழ்க்கையை எண்ணற்ற வழிகளில் செழுமை ஆக்கினாய்.
உன்னை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற தீவிர ஏக்கமும் மட்டுமே என்னிடம் உள்ளன. உனது ஆன்மா அமைதி அடைய வேண்டி பிரார்த்திக்கிறேன், எப்படியாவது, ஏதோவொரு வழியில் நாம் மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையை பிடித்துக் கொண்டிருக்கிறேன். மறு பிறவியில் சந்திப்போம். இன்றும் உனக்காக பிரார்த்தனை செய்தபோது, தாமரை வைத்தவுடன் மழை பெய்யத் தொடங்கியது" எனக் குறிப்பிட்டுள்ளார்.