இலண்டனில் விராட் கோலி.. கடைசி டெஸ்ட் போட்டியை பார்க்க வருவாரா?
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி இலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளதுடன், இந்தப் போட்டியில் இந்திய அணி கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்க உள்ளது.

இலண்டனில் குடியேறி இருக்கும் விராட் கோலி, விம்பிள்டன் டென்னிஸ் தொடரை நேரில் பார்க்க வந்திருந்தார். இதனால் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியை பார்க்க விராட் கோலி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி இலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளதுடன், இந்தப் போட்டியில் இந்திய அணி கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்க உள்ளது.
சுப்மன் கில் கேப்டனாக முதல் டெஸ்ட் தொடரில் தலைமை ஏற்றிருப்பதால், எப்படியாவது சமன் செய்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். அதற்கேற்ப பேட்டிங்கில் 4 சதங்கள் உட்பட 722 ரன்களை விளாசி இருக்கிறார்.
விராட் கோலி ஓய்வு பெற்ற பின், நம்பர் 4 பேட்டிங் வரிசையில் சுப்மன் கில் களமிறங்கி வருகிறார். கேப்டனான போது எப்படி விராட் கோலி ஆக்ரோஷமாக சிறப்பாக ஆடினாரோ, அப்படியான ஆட்டத்தை சுப்மன் கில் வெளிப்படுத்தி வருகிறார்.
சுப்மன் கில் தீவிரமாக விராட் கோலியின் ரசிகராவார். சுப்மன் கில்லை மிக விரைவாக இந்திய அணி செட்டப்பிற்குள் கொண்டு வந்ததும் விராட் கோலி தான். இந்த நிலையில் தனது சிஷ்யனுக்காக விராட் கோலி கடைசி டெஸ்ட் போட்டியை பார்க்க நேரில் வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுவரை இங்கிலாந்து மண்ணில் 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஆடிய போதும் விராட் கோலி ஒருமுறை கூட நேரில் வரவில்லை. மற்ற இந்திய வீரர்களான ஹர்ப்ரீத் ப்ரார், தீபக் சஹர் உள்ளிட்ட வீரர்கள் இந்திய அணி பயிற்சி முகாமில் ஈடுபட்டனர்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடரை பார்க்க வந்த இந்திய வீரர்கள் பலரும் இந்திய அணியை சந்தித்தனர். ஆனால் லண்டனிலேயே வாழ்ந்து வரும் விராட் கோலி இதுவரை இந்திய அணியையும், இந்திய வீரர்களையும் சந்திக்கவில்லை.
இதனால் கடைசி டெஸ்ட் போட்டியிலாவது விராட் கோலி வருவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விராட் கோலி வரும் பட்சத்தில் இந்திய அணி வீரர்களும் கூடுதல் உற்சாகம் அடைவார்கள்.
இந்திய வீரர் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் விராட் கோலி ஆக்ரோஷமாக ஒரு ஸ்பீச் கொடுத்தால், அது ரசிகர்களுக்கும் ஊக்கமளிக்கும் என்று பார்க்கப்படுகிறது.
2021-22ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு பின் விராட் கோலி இங்கிலாந்தில் குடியேறிவிட்டார். அங்கு சாதாரண மனிதனை போல் ரயிலில் செல்வதும், சாலைகளில் நடந்து செல்வதும் விராட் கோலிக்கு மகிழ்ச்சி அளித்ததாக கூறி இருந்தார்.
இதனால் இந்தியாவின் மிக முக்கியமான டெஸ்ட் போட்டியை நேரில் பார்க்க விராட் கோலி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.