தனியார் பஸ் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்
டீசல் விலை அதிகரிப்பு காரணமாக தனியார் பஸ் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டீசல் விலை அதிகரிப்பு காரணமாக தனியார் பஸ் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை தனியார் வாகன உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
பேருந்து கட்டணத்தை குறைந்தது 5% அதிகரிக்க வேண்டும் என அதன் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
நேற்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாயாலும், சுப்பர் டீசலின் விலை 62 ரூபாயாலும் உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |