பிக் பாஸ் தமிழ் 7ல் சம்பவம்... இந்த 7 பேரில் அவர் தான் முதல் பலி ஆடா?

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 2ம் தேதி ஆரம்பமானது. 

பிக் பாஸ் தமிழ் 7ல் சம்பவம்... இந்த 7 பேரில் அவர் தான் முதல் பலி ஆடா?

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 2ம் தேதி ஆரம்பமானது. 

பிக் பாஸ் 7 போட்டியாளர்கள்

இந்த பிக் பாஸ் சீசன் 7ல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக, கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், வினுஷா தேவி, மணிச்சந்திரா, அக்‌ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா என மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

சின்ன வீடு, பெரிய வீடு

பிக் பாஸ் வீடு, ஸ்மால் பாஸ் வீடு என ஒரே வீட்டை இரண்டாக பிரித்து செட் போட்டு இந்த முறை இரண்டு வீடு கான்செப்ட்டை கொண்டு வந்தனர். முதல் நாளே கேப்டனுக்கு பிடிக்காத 6 பேர் சின்ன வீட்டுக்கு குடிபுகுந்தனர். பெரிய வீட்டுக் காரங்களுக்கு சின்ன வீட்டுக்காரங்க தான் சமைச்சி தரணும் என்றெல்லாம் ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடப்பட்டு அவர்களை வச்சு செய்து விட்டார் பிக் பாஸ். 

ஸ்மால் பாஸ் என்பவரின் வாய்ஸிலும் ஆணாதிக்கம் இருப்பது ரசிகர்களை இரிடேட் செய்துள்ளது. அந்த வீட்டில் ஒரு பெண் குரல் கேட்டால் இன்னும் நல்லா இருந்திருக்கும் என்பது பலரது கருத்து.

நாமினேஷன் லிஸ்ட்

பிக் பாஸ் சீசன் 7ல் முதல் வாரத்தில் சீசன் டைட்டிலுக்கு தகுந்தது போல 7 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். பவா செல்லதுரை, ஜோவிகா, யுகேந்திரன், அனன்யா ராவ், ரவீனா தாஹா, ஐஷு மற்றும் பிரதீப் ஆண்டனி இதில், ரவீனா தாஹாவுக்கும் ஐஷூவுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் ஓட்டுக்களை போட்டு முதலிடத்தில் அன் அஃபிஷியல் போலிங்கில் கொண்டு வந்துள்ளனர்.

முதல் பலியாடு

இப்போதைக்கு அனன்யா ராவ் குறைவான ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், வயதான போட்டியாளரை தான் முதலில் வெளியே அனுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அந்த வகையில் யுகேந்திரன் முதல் வாரத்தில் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்படுகிறது. பவா செல்லதுரை தனது கதை சொல்லும் திறமையால் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...