எளிய மரப் பெட்டியில் அடக்கம் செய்யப்படவுள்ள போப் பிரான்சிஸின் நல்லுடல்

கத்தோலிக்கச் சமயத் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக மக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

Apr 21, 2025 - 15:20
எளிய மரப் பெட்டியில் அடக்கம் செய்யப்படவுள்ள போப் பிரான்சிஸின் நல்லுடல்

கத்தோலிக்கச் சமயத் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக மக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

போப் பிரான்சிஸ் இன்று காலை வத்திகனிலுள்ள காசா சாண்டா மார்டா இல்லத்தில்  காலமானார். அவருக்கு வயது 88.

வழக்கமாகக் கத்தோலிக்கச் சமயத் தலைவர்களின் இறுதிச் சடங்கு மிகவும் பாரம்பரியமாகவும் விரிவாகவும் நடைபெறும் நிலையில், தமது மறைந்தபிறகு நடைபெறும் இறுதிச்சடங்கு மிகவும் எளிமையாக இருக்கவேண்டும் என்று அவர் ஏற்கெனவே கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்குமுன்னர் கத்தோலிக்கச் சமயத் தலைவர்கள் சைப்ரஸ், ஓக் மரக்கட்டைகளால் தயாரிக்கப்பட்ட 3 அடுக்குப் பெட்டிகளில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், தமது உடல் துத்தநாகம் பூசப்பட்ட எளிய மரப் பெட்டியில் அடக்கம் செய்யப்படவேண்டும் என்று அவர் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தாக கூறப்படுகின்றது.

பொதுமக்களின் பார்வைக்காகத் தமது நல்லுடலை புனித பீட்டஸ் தேவாலயத்தில் உயரமான இடத்தில் வைக்கும் பாரம்பரியத்தையும் அவர் அகற்றி உள்ளார்.

அதற்குப் பதிலாக சவப்பெட்டிக்குள் தமது உடல் இருக்கும்போது அதன் மூடி அகற்றப்பட்ட நிலையில் பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

நூறாண்டுக்கு மேலாக வத்திகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்படும் முதல் கத்தோலிக்கச் சமயத் தலைவர் போப் பிரான்சிஸ் என்பதுடன், ரோமிலுள்ள St Mary Major தேவாலயத்தில் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!