இந்தியாவில் இப்படியொரு அன்பை எதிர்பார்க்கலை.. பாபர் அசாம் நெகிழ்ச்சி!
இந்தியாவில் இருப்பது சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வை கொடுப்பதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருப்பது சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வை கொடுப்பதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட உலகக்கோப்பை தொடர்களிலேயே ரசிகரக்ள் மத்தியில் மிகக் குறைந்த ஹைப் உள்ள தொடர் இதுவாக தான் இருக்கும்.
ஏனென்றால் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை தொடங்கி தீம் பாடல், தொடக்க விழா, கேப்டன்களுக்கான போட்டோஷூட் என்று பிசிசிஐ சொதப்பிய விஷயங்கள் ஏராளம்.
இந்த நிலையில் கடைசி நேரத்தில் கேப்டன்கள் அனைவரையும் அகமதாபாத் வரவழைத்து உலகக்கோப்பையுடன் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து "கேப்டன்ஸ் மீட்" என்ற பெயரில் அனைத்து அணிகளின் கேப்டன்களும் உரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை வர்ணனையாளர் ரவி சாஸ்திரி மற்றும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மோர்கன் தொகுத்து வழங்கினார்.
Also read: கோலி இந்திய அணிக்கு திரும்பினார்... 8ஆம் தேதி சம்பவம் உறுதி!
தொடக்கத்தில் ரவி சாஸ்திரி மற்றும் மோர்கன் கேட்கும் கேள்விகளுக்கு அனைத்து கேப்டன்களும் பதில் அளித்தனர். இதன்பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கேப்டன்கள் அனைவரும் பதில் அளித்தனர்.
அப்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமிடம் முதல்முறையாக இந்தியா வந்த அனுபவம் குறித்து ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், இந்திய மண்ணில் பாகிஸ்தான் வீரர்களுக்கு அளிக்கப்படும் வரவேற்பும், மரியாதையும் ஆச்சரியமாக உள்ளது.
இந்திய மண்ணில் எங்களுக்கு இவ்வளவு ரசிகர்கள் அன்பை பொழிவார்கள் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. நாங்கள் இந்தியாவில் இருக்கிறோம் என்ற உணர்வே இல்லை. எங்களின் சொந்த வீட்டில் இருப்பது போல் உணர்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி வீரர்கள் ஐதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியது முதலே ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் அவர்களை கைதட்டி வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து ஹோட்டல் வரை ரசிகர்கள் பின் தொடர்ந்தது, ஹோட்டலில் அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பு என்று பாகிஸ்தான் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், ரிஸ்வான், ஷதாப் கான், ஷாகின் அப்ரிடி உள்ளிட்ட வீரர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு கருத்துகள் ட்ரெண்டாகியது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |