எங்க 2 பேருக்கும் சமமான போட்டியாளர் இருக்காங்களா? சர்ச்சையை கிளப்பிய விசித்ரா
Bigg Boss 7 Tamil : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனின் முதல் நாளே விறுவிறுப்பான கட்டத்தை அடைந்து விட்டது. அப்படியே போட்டியாளர்களுக்குள் வாக்குவாதமும் ஆரம்பித்துவிட்டது.
Bigg Boss 7 Tamil
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனின் முதல் நாளே விறுவிறுப்பான கட்டத்தை அடைந்து விட்டது. அப்படியே போட்டியாளர்களுக்குள் வாக்குவாதமும் ஆரம்பித்துவிட்டது.
குறிப்பாக விசித்திரா இந்த சீசனின் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருப்பார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான முதல் புரமோ வீடியோவில் பிக்பாஸ் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார்.
முதல் நாளே வேலையை ஆரம்பித்த விசித்ரா.. ஐஷுவின் ஆடை குறித்து சர்ச்சை கருத்து..!
அதன்படி ’சின்ன பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் மட்டும்தான் சமைக்க வேண்டும் என்பது விதிமுறையாக இருந்த நிலையில், அந்த விதிமுறையை மீறி விசித்ரா மற்றும் யுகேந்திரன் ஆகிய இருவரும் சமையல் செய்தனர்.
எனவே இவர்கள் இருவரும் சின்ன பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று அறிவித்தார்.
இதனை அடுத்து பிரதீப் அந்தோணி ’அப்படி என்றால் அங்கிருந்து இரண்டு பேர்களை இங்கே அனுப்பி விடுங்கள் என்று கூறினார்.
உடனே விசித்ரா, ‘எதற்காக அங்கிருந்து இங்கே அனுப்ப வேண்டும் என்று சொல்கிறீர்கள் என கேட்டபோது ’நீங்கள் இரண்டு பேரும் அங்கு செல்கிறீர்கள் அல்லவா, அதற்கு பதிலாக அங்கிருந்து இரண்டு பேர் வரலாம் என்று கூறினேன்’ என்று தெரிவித்தார்.
அப்படியானால் எங்கள் இரண்டு பேருக்கு ஈகுவலான பிளேயர்கள் அங்கே இருக்கிறார்களா? என்ற விசித்ராவின் கேள்வியால் சர்ச்சை ஏற்பட்டது.
ஆரம்ப கட்டத்திலேயே போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து கொண்ட நிலையில் அடுத்தடுத்த நாட்களில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#Day2 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV" pic.twitter.com/ewKNDR7zUM — Vijay Television (@vijaytelevision) October 3, 2023
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |