கோலியின் ஓய்வு முடிவுக்கு இதுதான் காரணம்? பிசிசிஐ விடுத்துள்ள கோரிக்கை... என்ன செய்ய போகிறார்?
விராட் கோலி, அடுத்த டெஸ்ட் அணி கேப்டனை அடையாளம் காணும் வரை தான் தற்காலிகமாக கேப்டனாக இருக்கத் தயாராக உள்ளதாக கூறியிருக்கின்றார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, சில நாட்களுக்கு முன்பு, பிசிசிஐ-யிடம் தனக்கு டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை வழங்குமாறு கேட்டதாகவும், ஆனால், பயிற்சியாளர் கம்பீர் மற்றும் பிசிசிஐ நிர்வாகம் அதற்கு மறுப்பு கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் கடைசியாக இந்திய அணி விளையாடிய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் படுமோசமான தோல்விகளை சந்தித்தது.
அத்துடன், ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்மும் மோசமடைந்த நிலையில், இனி ரோகித் சர்மாவுக்கு டெஸ்ட் அணியில் இடம் அளிக்கப் போவதில்லைஎன பிசிசிஐ முடிவு எடுத்தது.
இதை அறிந்த விராட் கோலி, அடுத்த டெஸ்ட் அணி கேப்டனை அடையாளம் காணும் வரை தான் தற்காலிகமாக கேப்டனாக இருக்கத் தயாராக உள்ளதாக கூறியிருக்கின்றார்.
ஆனால், இளம் கேப்டனை தான் நியமிப்போம் என பிசிசிஐ நிர்வாகமும், இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் உறுதியாக இருந்ததை அறிந்த விராட் கோலி, டெஸ்ட் போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐ-யிடம் தெரிவித்திருக்கிறார்.
விராட் கோலிக்கு தற்போது 36 வயதாகும் நிலையில், அவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என பிசிசிஐ எதிர்பார்த்தது.
2025 முதல் 2027 வரை நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அவர் முழுமையாக விளையாடுவார் என இந்திய அணி நிர்வாகம் எதிர்பார்த்த நிலையில், ஒய்வு முடிவை பிசிசிஐ எதிர்பார்க்கவில்லை.
அதை மறுத்துவிட்ட பிசிசிஐ, விராட் கோலி தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. அது குறித்து விராட் கோலி என்ன முடிவெடுக்கப் போகிறார் என தெரியவில்லை.