கேப்டன் விஜயகாந்த் மறைவு - வருத்தத்தில் தளபதி 68 குறித்து விஜய் எடுத்த அதிரடி முடிவு!

கேப்டன் விஜயகாந்த் மறைவு - தளபதி விஜய் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டு இருக்கும் இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார். 

Dec 29, 2023 - 18:06
கேப்டன் விஜயகாந்த் மறைவு -  வருத்தத்தில் தளபதி 68 குறித்து விஜய் எடுத்த அதிரடி முடிவு!

கேப்டன் விஜயகாந்த் மறைவு 

கேப்டன் விஜயகாந்தின் மீது தளபதி விஜய் தீவிர மரியாதை கொண்டவர். அந்த வகையில் விஜயகாந்தின் மறைவு விஜய் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேமுதிக முன்னாள் தலைவரும் முன்னணி நடிகருமான விஜயகாந்த் உடல்நல குறைவு ஏற்பட்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு நேற்று காலை காலமானார். 
இவரது உடல் தற்போது தீவுத்திடலில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சல் செலுத்தி வருகிறார்கள். 

நடிகர்களும் அரசியல்கட்சி பிரமுகர்களும் தொண்டர்களும் விஜயகாந்தின் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தளபதி விஜய் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டு இருக்கும் இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார். 

அப்போது விஜயகாந்தை பார்த்து விஜய் செய்த விஷயங்கள் இணையத்தில் வைரல் ஆகியது. கண்ணீர் வரவில்லை என்றாலும் ஆடிப்போன தளபதி விஜய்யின் போட்டோக்கள் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

தளபதி 68 அப்டேட்

விஜயகாந்தின் மறைவையொட்டிய தற்போது மிகப்பெரிய முடிவை எடுத்து இருக்கிறாராம் விஜய். தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் அவரது 68வது படத்தில் நடித்துவருகிறார்.  

இந்த படத்தின் பெயர் அறிவிப்பு இன்னும் வெளியாகாமல் இருக்கும் இந்த நிலையில் படத்தின் பெயர் மற்றும் படம் குறித்த வேறு சில அறிவிப்புகள் புத்தாண்டுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் விஜயகாந்தின் மறைவினால் மீளாதுயரல் சிக்கியிருக்கும் தளபதி விஜய் அந்த அறிவிப்புகளை புத்தாண்டுக்கு வெளியிட வேண்டாம் என கூறி இருக்கிறாராம். ‌

விஜயகாந்தின் மறைவு அவரது குடும்பத்தினர் தொண்டர்கள் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த நேரத்தில் தளபதி 68 படத்தின் அறிவிப்பை கொடுப்பது சரியாக இருக்காது என முடிவெடுத்துள்ளார் தளபதி விஜய். 

இது குறித்து தயாரிப்பு நிறுவனமும் இயக்குனரும் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தளபதி 68 படத்தின் அறிவிப்பு மக்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல புத்தாண்டுக்கு வெளியாகாது என்பது குறிப்பிடத்தக்கது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!