நடிகையின் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு சிக்கிய வலைப்பேச்சு பிஸ்மி, அந்தணன்!

மலையாளத்தில் வெளியான சூப்பர் சரண்யா படத்தில்  மமிதா பைஜூ, பிரேமலு படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்களை கவனம் ஈர்த்தார். 

Mar 24, 2025 - 13:23
நடிகையின் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு சிக்கிய வலைப்பேச்சு பிஸ்மி, அந்தணன்!

பிரேமலு படத்தில் நடித்துள்ள 23 வயது நடிகையின் புகைப்படத்தை ஏஐ மூலம் கவர்ச்சியாக உருவாக்கி வெளியிட்ட வலைப்பேச்சு யூடியூப் சேனல் மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் வெளியான சூப்பர் சரண்யா படத்தில்  மமிதா பைஜூ, பிரேமலு படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்களை கவனம் ஈர்த்தார். 

தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ரிபெல் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து விஜயின் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.

அத்துடன், விஷ்ணு விஷால் நடிக்கும் இரண்டு வானம் படத்தில் நடித்து வருவதுடன், . பல புதிய படங்களில் மமிதா பைஜூ நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய், விஷ்ணு விஷால், பிரதீப் ரங்கநாதன், தனுஷ், சூர்யா ஆகியோரின் படங்களில் கமிட்டான மமிதா பைஜூ தற்போது இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் நடிக்கும் முதல் படத்திற்கு ஜோடியாக நடிக்க இருக்கிறாராம். 

இ்ந்நிலையில், சினிமா குறித்த அப்டேட்களை அளித்து வரும் வலைப்பேச்சு யூடியூப் சேனலில் ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட மமிதா பைஜூவின் கவர்ச்சி புகைப்படம் பெரும் சர்ச்சையாகியுள்ளது.

பிஸ்மி, அந்தணன் மற்றும் சக்தி ஆகியோர் ஷங்கரின் மகன் ஹீரோவாக அறிமுகம் ஆவது குறித்த செய்தியின் நடுவே மமிதா பைஜூவின் கவர்ச்சி புகைப்படம் இடம்பெற்றிருந்தது. 

இதை பார்த்தால் ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இதை பார்த்த சிலர் பிஸ்மி, அந்தணனை கடுமையாக தி்டடி வருகின்றனர். 

முன்னதாக ஆதாரமற்ற சினிமா தகவல்களை தருவதாகக் கூறி நயன்தாரா இவர்களை 3 குரங்குகள் என விமர்சித்திருந்தார். பின்னர் அஜித்தை பற்றி பேசி பெரிய சர்ச்சைக்குள் பிஸ்மி, அந்தணன் சிக்கினர். 

தற்போது மமிதா பைஜூவின் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு சிக்கி உள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!