இந்திய அணி செய்த தவறு.. கோப்பையை இழந்தது... ஆஸி அபார வெற்றி!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் பைனலுக்கு இந்தியா யு19 அணியும், ஆஸ்திரேலியா யு19 அணியும் தகுதிபெற்றன.

Feb 12, 2024 - 12:44
இந்திய அணி செய்த தவறு.. கோப்பையை இழந்தது... ஆஸி அபார வெற்றி!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் பைனலுக்கு இந்தியா யு19 அணியும், ஆஸ்திரேலியா யு19 அணியும் தகுதிபெற்றன.

ஏற்கனவே, இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், ஒருநாள் உலகக் கோப்பை பைனலில் விளையாடி ஆஸ்திரேலியா வென்றதால், தற்போது யு19 உலகக் கோப்பையில், இதற்கு இந்திய யு19 அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தன.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வுசெய்த ஆஸ்திரேலிய யு19 அணி, சிறப்பாகவே பேட்டிங் செய்யவில்லை. ஹேரி டிக்சன் 42 (56), கேப்டன் வெய்ப்கன் 48 (66), ஹர்ஜாஸ் சிங் 55 (64), ஓலிவர் பீக் 46 (43) ஆகியோர் ட்டுமே பெரிய ஸ்கோர் அடித்தார்கள். 

இதனால், ஆஸ்திரேலிய யு19 அணி 50 ஓவர்கள் முடிவில் 253/7 ரன்களைதான் அடித்தது. ராஜ் லெம்பானி 10 ஓவர்களை வீசி 38 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்களை கைப்பற்றினார்கள். நமன் திவாரி 2 விக்கெட்களை எடுத்தார்.

இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய யு19 அணியில், ஓபனர் ஆதர்ஷ் சிங் 47 (77), ஒன்டவுன் பேட்டர் முஷிர் கான் 22 (33) ஆகியோர் மட்டுமே டாப் ஆர்டரில் இரட்டை இலக்க ரன்களை அடித்தார்கள். 

ஓபனர் அர்ஷின் 3 (6), கேப்டன் உதய் சகரன் 8 (18), சச்சின் தாஸ் 9 (8), மோலியா 9 (21) ஆகியோர்கள் ஒற்றை இலக்க ரன்களை மட்டும் அடித்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இறுதிக் கட்டத்தில், 8ஆவது பேட்டர் முருகன் அபிஷேக் 42 (46) ஓரளவுகளுக்கு ரன்களை அடித்தார். அவ்வளவுதான், இந்திய யு19 அணி, 43.5 ஓவர்கள் முடிவில் 174/10 ரன்களைதான் அடித்தது.

ஆஸ்திரேலிய அணி பௌலர்கள் மஹிலி பிரயட்மேன் 3/15, ராப் மெக்மில்லன் 3/43 ஆகியோர் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்கள். கலும் விட்லெர் 2 விக்கெட்களை எடுத்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!