U19 அணித் தேர்வு சர்ச்சை: டிராவிட் மகனுக்கு வாய்ப்பு; வைபவ் புறக்கணிப்பு? பிசிசிஐயின் விளக்கம்!
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியைத் தேர்வு செய்வதற்காக, பிசிசிஐ (BCCI) முத்தரப்பு தொடர் ஒன்றை நடத்த முடிவெடுத்துள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியைத் தேர்வு செய்வதற்காக, பிசிசிஐ (BCCI) முத்தரப்பு தொடர் ஒன்றை நடத்த முடிவெடுத்துள்ளது.
இந்தத் தொடர் வரும் நவம்பர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை பெங்களூரில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா அண்டர் 19 ஏ, இந்தியா அண்டர் 19 பி மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் பங்கேற்க உள்ளன.
இந்தியா U19 A அணி: விஹான் மல்ஹோத்ரா (கே), அபிக்யான் குந்து (துணைக் கே & WK), வாஃபி கச்சி, வன்ஷ் ஆச்சார்யா, வினீத் வி.கே, லக்ஷ்ய ரைச்சந்தானி, ஏ. ராபோல் (WK), கனிஷ்க் சௌஹான், கிலான் ஏ படேல், அன்மோல்ஜீத் சிங், முகமது இனான், ஹெனில் படேல், அஷுதோஷ் மஹிடா, ஆதித்ய ராவத், முகமது மாலிக்.
இந்தியா U19 B அணி: ஆரோன் ஜார்ஜ் (கே), வேதாந்த் திரிவேதி (துணைக் கே), யுவராஜ் கோஹில், மௌல்யராஜ்சிங் சாவ்டா, ராகுல் குமார், ஹர்வன்ஷ் சிங் (WK), அன்வய் திராவிட் (WK), ஆர்.எஸ். அம்ப்ரிஷ், பி.கே. கிஷோர், நமன் புஷ்பக், ஹெம்சுடேஷன் ஜே, உதவ் மோகன், இஷான் சூட், டி. தீபேஷ், ரோஹித் குமார் தாஸ்.
டிராவிட் மகனுக்கு வாய்ப்பு; வைபவுக்கு புறக்கணிப்பா? முன்னாள் பயிற்சியாளரும் நட்சத்திர வீரருமான ராகுல் டிராவிட்டின் மகன் அன்வே டிராவிட், இந்தியா U19 B அணியில் விக்கெட் கீப்பராக (WK) இடம் பெற்றுள்ளார்.
ஆனால், பீகாரைச் சேர்ந்த 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி இந்த அணியில் இடம் பெறவில்லை. இவர் அண்டர் 19 கிரிக்கெட்டில் புயல் போல் நுழைந்து, ஐபிஎல் தொடரில் 35 பந்துகளில் சதம், ஆஸ்திரேலிய மண்ணில் சதம், இங்கிலாந்து மண்ணில் சதம் என பல்வேறு சாதனைகளைப் படைத்தவர்.
வைபவ் சூர்யவன்ஷியும், சிஎஸ்கே அணியின் இளம் வீரரான ஆயுஷ் மாத்ரேக்கும் வாய்ப்பு தரப்படாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. டிராவிட் மகன் என்பதால் வாய்ப்பு வழங்கிய பிசிசிஐ, 14 வயது வீரர் சூர்யவன்ஷிக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிசிசிஐயின் விளக்கம்: இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ, ஆயுஷ் மாத்ரே மற்றும் வைபவ் சூர்யவன்ஷியின் பெயரைத் தாங்கள் பரிசீலிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. ஏனெனில், இதே காலகட்டத்தில், அதாவது நவம்பர் 14ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ஓமனில் நடைபெறும் ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்றுள்ளார். மேலும், ஆயுஷ் மாத்ரே ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடுவதால் அவர் பெயரும் இதில் சேர்க்கப்படவில்லை என்று பிசிசிஐ கூறியுள்ளது.
