பல வருடங்களுக்கு பின்னர் இந்திய டெஸ்ட் அணியில் முழுநேர பேட்ஸ்மேன்களாக இடம்பிடித்த இரு தமிழர்கள்!
விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

2011ஆம் வருடத்துக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் முழுநேர பேட்ஸ்மேனாக சாய் சுதர்ஷன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என தமிழகத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் மற்றும் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், தமிழகத்தைச் சேர்ந்த இருவர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். வாஷிங்டன் சுந்தர் ஆஸ்திரேலியா டெஸ்ட் சீரிஸுக்கு பிறகு இங்கிலாந்து தொடரிலும் இடம்பெற்றுள்ளார்.
அவருடன், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரரான சாய் சுதர்ஷன் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 638 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் பெற்றிருக்கிறார். அவரின் பார்ம் அவரை டெஸ்ட் அணியில் இடம்பெற வைத்துள்ளது.
கேப்டனாக ஜஸ்பிரித் பும்ராவை நியமிக்காதது ஏன்? - அஜித் அகர்கர் சொன்ன இரண்டு காரணங்கள்!
இந்திய டெஸ்ட் அணியில் தமிழகத்தில் இருந்து நிறைய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். எனினும், 2011க்கு பிறகு ஒரு முழுநேர பேட்ஸ்மேனாக தமிழகத்தைச் சேர்ந்த எந்த வீரரும் இடம்பெறவில்லை.
கடைசியாக அபினவ் முகுந்த் 2011ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருந்தார். அவருக்கு பிறகு அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், நடராஜன் ஆகியோர் இடம்பெற்றாலும் அவர்கள் பந்துவீச்சாளர்களாக அணியில் இடம்பிடித்தனர்.
இந்த நிலையில், 14 ஆண்டுகளுக்கு தற்போது முழுநேர பேட்ஸ்மேனாக தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் இந்திய அணியில் இடம்பிடித்திருக்கிறார்.
சாய் சுதர்சனை டெஸ்ட் அணியில் எடுக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை இருந்தது இங்கிலாந்து தொடர் மூலமாக நிறைவேற உள்ளது.