சுப்மன் கில்லின் இடத்துக்கு வந்துள்ள ஆபத்து.. எமனாக வந்த ருதுராஜ்... ஏன் தெரியுமா?

அடுத்த கோலி இவர் தான் என்று ரசிகர்கள் போற்றும் நிலையில், கில்லின் இந்த கோரிக்கையை ஏற்காத பிசிசிஐ உடனே இந்திய அணியில் வந்து சேருமாறு கூறியிருந்தது.

சுப்மன் கில்லின் இடத்துக்கு வந்துள்ள ஆபத்து.. எமனாக வந்த ருதுராஜ்... ஏன் தெரியுமா?

இந்தியா மற்றம் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது t20 போட்டி ஜோனஸ்பர்க் நகரில் இன்று இரவு நடக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி போட்டி இதுவாகும். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.

இந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே தென்னாப்பிரிக்காவுக்கு வந்து விட்டார்கள். ஆனால் சுப்மன் கில் தான் விடுமுறையில் இருப்பதால் தென்னாப்பிரிக்க தொடருக்கு உடனே வர முடியாது என்று பிசிசிஐயிடம் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கோலி இவர் தான் என்று ரசிகர்கள் போற்றும் நிலையில், கில்லின் இந்த கோரிக்கையை ஏற்காத பிசிசிஐ உடனே இந்திய அணியில் வந்து சேருமாறு கூறியிருந்தது.

இந்த தொடரின் முதல் டி20 போட்டி மழையால் இரத்தான நிலையில் இரண்டாவது போட்டியில் களமிறங்கிய கில் டக்அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். 

அடுத்து வருடம் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கு இந்திய அணியை பிசிசிஐ தயார் செய்து வரும் நிலையில் கில் இவ்வாறு மோசமான முறையில் செயற்படுவது அவருடைய இடத்துக்கே ஆபத்தை ஏற்படுத்தி விட்டது.

அதாவது,  கில் அணிக்கு வந்ததால் தன்னுடைய இடத்தை ருதுராஜ் இழந்ததாக கருதப்பட்ட நிலையில், நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் நட்சத்திர வீரர் ருதுராஜ் தன்னுடைய திறமையை நிரூபித்தார்.

இந்த நிலையில், மூன்றாவது டி20 போட்டியில் ருதுராஜ் அணிக்கு திரும்ப அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சிறப்பாக செயல்பட்டால் கில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...