இந்திய அணியில் பெரும் மாற்றம்? சுப்மன் கில்லுக்கு ஓய்வு, ஸ்ரேயாஸ் கேப்டன், ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய அணியில் பெரும் மாற்றம்? சுப்மன் கில்லுக்கு ஓய்வு, ஸ்ரேயாஸ் கேப்டன், ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

ஒருநாள் தொடரை இந்திய அணி ஏற்கெனவே இழந்துவிட்ட நிலையில், நாளை நடைபெறவுள்ள கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றிக்காக களமிறங்க உள்ளது. கடந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதால், இந்தக் கடைசி ஆட்டத்தில் மாற்றம் நிகழுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய அணியின் கேப்டனாக இருந்த சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சுப்மன் கில் தொடர்ச்சியாக பல்வேறு தொடர்களில் (இங்கிலாந்து டெஸ்ட் தொடர், ஆசியக் கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்) விளையாடி வருவதால், டி20 தொடருக்கு முன்பாக அவருக்கு ஓய்வு கொடுக்க பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.

இதன் காரணமாக, துணைக் கேப்டனாக இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த சில மாதங்களாக இந்தியா ஏ அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். சுப்மன் கில்லுக்கு மாற்றாக ஸ்ரேயாஸ் ஐயரைத் தயார் செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் பார்க்கப்படுகிறது.

சுப்மன் கில் ஓய்வெடுப்பதால், மாற்றுத் தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்ஸ்வால் இந்திய அணியுடன் நீண்ட காலமாகப் பயணித்தாலும், இதுவரை அவர் ஒரேயொரு ஒருநாள் போட்டியில் மட்டுமே ஆடி இருக்கிறார்.

ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு அளிப்பதற்கான முக்கியக் காரணங்களாக, அவர் 2027 உலகக்கோப்பைத் தொடருக்காக தயார் செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது. மேலும், ஜெய்ஸ்வாலுக்கு அளிக்கப்படும் வாய்ப்புகளில் அவர் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்தால், ரோகித் சர்மாவின் ஓய்வு முடிவும் விரைவாக எடுக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா திடீரென ஓய்வை அறிவித்தால், அவரது இடத்தில் விளையாடுவதற்கு ஜெய்ஸ்வால் தயாராக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

தொடரை இந்திய அணி ஏற்கெனவே இழந்துவிட்டதால், ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்க கவுதம் கம்பீர் முடிவு எடுத்திருக்க வாய்ப்புகள் அதிகம். பயிற்சியாளர் கவுதம் கம்பீர், இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக ஜெய்ஸ்வாலுடன் நீண்ட நேரமாக ஆலோசனை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால், நாளைய ஆட்டத்தில் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.