செமி பைனலுக்கு ஆஸ்திரேலியா போவது சந்தேகம்.. ஆப்கானிஸ்தான் வைத்த செக்.. காத்திருக்கும் கண்டம்

ஒருவேளை அந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று. ஆஸ்திரேலியா அணி தோல்வியை சந்தித்தால் அது புள்ளிப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் நெட் ரன் ரேட் அடிப்படையில் மேலே வந்து விடும்.

செமி பைனலுக்கு ஆஸ்திரேலியா போவது சந்தேகம்.. ஆப்கானிஸ்தான் வைத்த செக்.. காத்திருக்கும் கண்டம்

2023உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி யாரும் எதிர்பார்க்காத திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை அனைத்து அணிகளும் ஆறு லீக் போட்டிகளில் ஆடி முடித்து இருக்கின்றன. அதன் முடிவில், இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.

உலகக்கோப்பை அரை இறுதிக்கு லீக் சுற்றில் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இடம் பெறும் அணிகளே செல்லும் என்ற நிலையில், ஆப்கானிஸ்தான் அணி ஐந்தாம் இடம் பிடித்து தன் அரை இறுதி வாய்ப்பை பிரகாசமாக்கி இருக்கிறது.

தற்போது முதல் இரண்டு இடங்களில் இந்தியா 12 புள்ளிகளுடனும், தென்னாப்பிரிக்கா 10 புள்ளிகளுடனும் உள்ளன. தென்னாப்பிரிக்கா இன்னும் ஒரு போட்டியில் வென்றால் அந்த அணியின் அரை இறுதி வாய்ப்பு உறுதி ஆகி விடும். 

மூன்றிலும் தோல்வி அடைந்தாலும் கூட தென்னாப்பிரிக்கா தற்போது அதிக நெட் ரன் ரேட் வைத்திருப்பதால் அரை இறுதிக்கு அதை வைத்தும் முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும்.

ஆனால், 8 புள்ளிகளுடன் அடுத்த இரண்டு இடங்களில் இருக்கும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு, ஆப்கானிஸ்தான் ஐந்தாம் இடத்தில் இருப்பது ஆபத்தான ஒன்று. 

ஆப்கானிஸ்தான் 6 புள்ளிகளுடன் இருந்தாலும், தனது மீதமுள்ள மூன்று லீக் போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றால் 12 புள்ளிகள் பெற்று நேரடியாக அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

அப்படி நடந்தால் நிச்சயம் ஆஸ்திரேலியா அரை இறுதி வாய்ப்பை இழக்கும். அதற்கு காரணம், ஆப்கானிஸ்தான் அணி இனி தான் ஆஸ்திரேலியா உடன் மோத வேண்டும். 

ஒருவேளை அந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று. ஆஸ்திரேலியா அணி தோல்வியை சந்தித்தால் அது புள்ளிப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் நெட் ரன் ரேட் அடிப்படையில் மேலே வந்து விடும்.

ஆஸ்திரேலியா அணி இன்னும், இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை சந்திக்க வேண்டும். அரை இறுதிக்கு செல்ல இதில் இரண்டு போட்டிகளில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். 

இங்கிலாந்து அணி அதிரடி வீரர்களை வைத்திருந்தும் தோல்விகளை சந்தித்து அரை இறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துள்ளது. அந்த அணி மீதமுள்ள போட்டிகளில் வென்றாவது தன் மீதான விமர்சனத்தை மாற்ற முயற்சி செய்யும். 

எனவே, ஆஸ்திரேலியா அணிக்கு, இங்கிலாந்து போட்டி கடும் சவாலாக இருக்கக் கூடும். அடுத்து ஆப்கானிஸ்தான் போட்டியும் சவாலாகவே இருக்கும். இந்த இரண்டு கண்டங்களை தாண்டினால் தான் ஆஸ்திரேலியாவுக்கு அரை இறுதி வாய்ப்பு உறுதி ஆகும்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...