உலக கோப்பை புள்ளி பட்டியல்.. பாகிஸ்தானுக்கு அடிச்ச அதிஷ்டம்.. ஆப்கானிஸ்தான் அரையிறுதி என்ன ஆச்சு?

உலகக் கிண்ண கிரிக்கெட் 2023: 16 புள்ளிகள் உடன் இந்திய அணி முதல் இடத்தில் இருக்கிறது. 12 புள்ளிகள் உடன் தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இடத்திலும் ஆஸ்திரேலிய அணியும் 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 

உலக கோப்பை புள்ளி பட்டியல்.. பாகிஸ்தானுக்கு அடிச்ச அதிஷ்டம்.. ஆப்கானிஸ்தான் அரையிறுதி என்ன ஆச்சு?

உலகக் கிண்ண கிரிக்கெட் 2023

நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மேக்ஸ்வெல் அபாரமாக விளையாடி ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது.

இந்திய அணி 16 புள்ளிகள் உடன்முதல் இடத்தில் இருக்கிறது. 12 புள்ளிகள் உடன் தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இடத்திலும் ஆஸ்திரேலிய அணியும் 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 

எட்டு போட்டிகளில் விளையாடி நியூசிலாந்த அணி 8 புள்ளிகள் உடன் நான்காவது இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் தலா எட்டு புள்ளிகள் உடன் ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் இருக்கிறது. 

தற்போது மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் நான்காம் இடத்தைப் பிடிக்க போகும் அணி எது என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.

செய்த 2 தவறுகள்.. மொத்த மேட்ச்சும் போச்சு.. ஆப்கானிஸ்தான் தோல்விக்கு காரணமே அதுதான்!

இதில் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளும் கடைசி இடத்திற்கு மோத உள்ளன. நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதும் கடைசி லீக் ஆட்டம் மழையால் ரத்தாகும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. 

பாகிஸ்தான் அணி தங்களுடைய கடைசி ஆட்டத்தை இங்கிலாந்தை வீழ்த்தினால் அவர்கள் அரையிறுதி சுற்றுக்கு செல்ல முடியும். இதேபோன்று ஆப்கானிஸ்தான் அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை எதிர் கொள்கிறது.

இதில் தென்னாபிரிக்காவை பெரிய ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வீழ்த்தி இருந்தால் மட்டுமே அரை இறுதி சுற்றுக்கு செல்ல முடியும். 

தற்போது இருக்கும் புள்ளி பட்டியலை பார்த்தால் அரை இறுதி சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் மோதிக்கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது என்பது போல்தான் உள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...