செய்த 2 தவறுகள்.. மொத்த மேட்ச்சும் போச்சு.. ஆப்கானிஸ்தான் தோல்விக்கு காரணமே அதுதான்!

ஒரு பாரிய தோல்வியை கொடுத்து ஆப்கானிஸ்தான் அணியை நிலைகுலைய வைத்து இருக்கிறது ஆஸ்திரேலியா.

செய்த 2 தவறுகள்.. மொத்த மேட்ச்சும் போச்சு.. ஆப்கானிஸ்தான் தோல்விக்கு காரணமே அதுதான்!


வெற்றி பெற வேண்டிய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தமைக்கு அந்த அணி செய்த இரண்டு தவறுகள் மட்டுமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு பாரிய தோல்வியை கொடுத்து ஆப்கானிஸ்தான் அணியை நிலைகுலைய வைத்து இருக்கிறது ஆஸ்திரேலியா.

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி  291 ரன்கள் குவித்தது. இப்ராகிம் சத்ரான் சதம் அடித்தார். உலகக்கோப்பை தொடரில் சதம் அடிக்கும் முதல் வீரர் அவர் தான்.

அடுத்து ஆடிய ஆஸ்திரேலியாவின் அதிரடி துவக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் டக் அவுட் ஆகியும், டேவிட் வார்னர் 18 ரன்களிலும் ஆட்டமிழக்க ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 91 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது. 

வெற்றிக்கு 200 ரன்கள் தேவை என்ற நிலையில் களத்தில் கிளென் மேக்ஸ்வெல் - பாட் கம்மின்ஸ் இருந்தனர். இதில் மேக்ஸ்வெல் மட்டுமே அதிரடியாக ரன் அடிக்கும் ஆற்றல் கொண்டவர்.

அப்போது மேக்ஸ்வெல் 27 ரன்களே எடுத்து இருந்த நிலையில், அவர் அவுட் ஆனால் ஆஸ்திரேலியா கதை முடிந்தது என எண்ணிய போது அவர் கொடுத்த எளிய கேட்சை கோட்டை விட்டார் ஆப்கன் வீரர் முஜீப் உர் ரஹ்மான். 

ஆப்கானிஸ்தான் செய்த அந்த ஒரு தவறுக்கு பின் ஆஸ்திரேலியா சுதாரித்தது. மேக்ஸ்வெல் மட்டும் ரன் அடிக்க, கம்மின்ஸ் ரன்னே அடிக்காமல், மேக்ஸ்வெல்லுக்கு ஸ்ட்ரைக் கொடுக்கும் வேலையை மட்டும் செய்தார். 

இதன் பின்னர், ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு விக்கெட் வீழ்த்துவது கடினம் ஆனது. மேக்ஸ்வெல் அரைசதம் அடித்த போதே ஆப்கானிஸ்தான் பதறியது. தொடர்ந்து சீரான இடைவெளியில் ஆப்கானிஸ்தான் அணி விக்கெட்களை வீழ்த்திய நிலையில், சில ஓவர்கள் விக்கெட் கிடைக்கவில்லை என்றதும் அந்த அணி பதற ஆரம்பித்ததுதான்  இரண்டாவது தவறு. 

இந்த இரண்டு தவறுகளே ஆப்கானிஸ்தான் அணியின் தோல்விக்கு காரணம். காலில் வலியுடன் ஒரு காலை மட்டும் ஊன்றிக் கொண்டு போராடி 201 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதி செய்தார் மேக்ஸ்வெல். 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...