புதிய ஆதி குணசேகரன் இவர்தான்.. 'எதிர்நீச்சல்' புரமோ வீடியோ வெளியானது!
இதனை அடுத்து அவரது கேரக்டரை எப்படி கொண்டு செல்வது என்று தெரியாமல் இவர் வீட்டை விட்டு ஓடி போய் விட்டதாக சில வாரங்கள் கடத்தப்பட்டது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்த ஜி மாரிமுத்து திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இதனை அடுத்து அவரது கேரக்டரை எப்படி கொண்டு செல்வது என்று தெரியாமல் இவர் வீட்டை விட்டு ஓடி போய் விட்டதாக சில வாரங்கள் கடத்தப்பட்டது.
ஆனால் தற்போது ஆதி குணசேகரன் கேரக்டர் மீண்டும் வீட்டுக்கு வருவது போன்ற காட்சி வரவுள்ளது. இது குறித்த புரமோ வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஜி. மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் கேரக்டரில் தற்போது வேல ராமமூர்த்தி நடிக்கிறார் என்பது இந்த புரோமோவில் இருந்து தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து ‘எதிர்நீச்சல்’ சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிப்பது யார் என்ற சஸ்பென்ஸ் உடைந்து விட்டது. இருப்பினும் ஜி மாரிமுத்துவின் நடிப்பை ஈடுகட்டும் வகையில் வேல ராமமூர்த்தி நடிப்பு இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |