சினிமாவுக்கு வரும் முன் நமிதா என்ன செய்தார் தெரியுமா? 

தனது நடிப்பு திறமையாலும் நடனம் மற்றும் கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிவைத்திருக்கும் நடிகை நமிதா  சினிமாவிற்கு வரும் முன்னர் என்ன செய்தார் தெரியுமா?

Sep 29, 2023 - 11:56
Oct 1, 2023 - 19:41
சினிமாவுக்கு வரும் முன் நமிதா என்ன செய்தார் தெரியுமா? 

தனது நடிப்பு திறமையாலும் நடனம் மற்றும் கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிவைத்திருக்கும் நடிகை நமிதா  சினிமாவிற்கு வரும் முன்னர் என்ன செய்தார் தெரியுமா?

நமிதா முகேஷ் வங்கவாலா மே 10, 1981 இல் இந்தியாவின் குஜராத்தின் சூரத்தில் பிறந்துள்ளார். 

அவள் அதே பகுதியில் தனது படிப்பை முடித்துவபிட்டு மாடலிங் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்தார்.

இந்த முயற்சியின் விளைவாக 1998 இல், அவர் மிஸ் சூரத் ஆக முடிசூட்டப்பட்டார், 2001 இல் மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று 4வது ரன்னர் அப் ஆனார். 

மிஸ் இந்தியா போட்டிக்குப் பிறகு, ஹிமானி கிரீம் & கை சோப்பு, அருண் ஐஸ் கிரீம்ஸ், மாணிக்சந்த் குட்கா மற்றும் நைல் ஹெர்பல் ஷாம்பு போன்ற பல முக்கிய தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார்.

அவர் 2002 ஆம் ஆண்டு சொந்தம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் கால்பதிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 

பின்னர் அதே ஆண்டில் வெங்கடேஷுக்கு எதிரே ஜெமினியில் நடித்தார். அவரது அற்புதமான நடிப்ப திறமை அவருக்கு தமிழ் சினிமாவிலும் அதிக வாய்ப்புக்களை வழங்கியது .

2004 ஆம் ஆண்டில், விஜயகாந்க்கு ஜோடியாக தனது முதல் தமிழ்த் திரைப்படமான 'எங்கள் அண்ணா' படத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

இதன் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் அடுத்தடுத்து ஹிட் படங்கள் மூலம், தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக பிரபல்யம் ஆனார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்துள்ளார். விஜய், அஜித், பாலகிருஷ்ணா, மோகன்லால் மற்றும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

2017 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரபல தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

தற்போது தனது 13 வருட  காதல் கணவனுடனும் இரட்டை குழந்தைகளுடனும் வாழ்வின் மகிழ்ச்சியான தருணத்தை அனுபவித்து வருகின்றார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!