காலில் கட்டு.... காயத்துடன் விளையாடிய சிராஜ்.. நாட்டுக்காக உயிரை கொடுத்து விளையாடிய வீரர்..!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய சிராஜ் 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய சிராஜ் 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கடைசி டெஸ்ட் போட்டியில் சிராஜ் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்ற, இந்திய அணி திரில் வெற்றி பெற்றது.
கடைசி நாளில் இந்தியாவின் வெற்றிக்கு நான்கு விக்கெட்டுகளும் இங்கிலாந்தின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிராஜ் அனல் பறக்கும் வேகத்தில் பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த தொடரில் மட்டும் சிராஜ் 185 ஓவர்களுக்கு மேல் வீசி அசத்திருகின்றார். பும்ராவுக்கு காயம் ஏற்பட்டு விடலாம் என்று அவரை பாதுகாத்த பிசிசிஐ, சிராஜை ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வைத்தது.
இந்த நிலையில் சிராஜ் தமக்கு ஏற்பட்ட காயத்தையும் மீறி தான் விளையாடி இருக்கிறார் என்ற உண்மை தற்போது தெரியவந்துள்ளது.
நான்காவது டெஸ்ட் போட்டியின் போது மாடியில் கீழே இறங்கி வந்த போது அவருக்கு கால் மடங்கி சுளுக்கு ஏற்பட்டிருக்கிறது. அது மட்டுமில்லாமல் தொடர்ந்து ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதால் அவருக்கு தசைகளில் வலி ஏற்பட்டிருக்கிறது.
இதனை சமாளிப்பதற்காக காலில் பண்டேடுகளை அணிந்து சிராஜ் இந்த போட்டியில் விளையாடியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பில்டிங் செய்யும் போது முட்டி பகுதியில் அவருக்கு ரத்த காயமும் ஏற்பட்டிருக்கிறது.
எனினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிராஜ் அபாரமாக விளையாடி இருக்கின்றார். பும்ரா இல்லாத நிலையில் தாமும் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினால் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை சிராஜ் உணர்ந்து இருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் இனி இந்தியா அக்டோபர் மாதம் தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இரண்டு மாதத்திற்கு மேல் ஓய்வு இருப்பதால் உடல் தகுதியை மீண்டும் எட்டி விடலாம் என்ற நம்பிக்கையில் சிராஜ் நாட்டுக்காக போராடி இருக்கின்றார்.
சிராஜின் இந்த கடின உழைப்பால் தான் இந்தியா தற்போது வெற்றியை பெற்று இருக்கிறது.