அஸ்வின் உட்பட பலருக்கு வாய்ப்பு இல்லை... இந்த வீரர்களுக்கு மட்டும் தான் வாய்ப்பு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போதே 2026 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துள்ளதுடன், அது குறித்து அணியின் கேப்டன் தோனி வெளிப்படையாகப் பேசி உள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போதே 2026 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துள்ளதுடன், அது குறித்து அணியின் கேப்டன் தோனி வெளிப்படையாகப் பேசி உள்ளார்.
தற்போது மாற்று வீரர்களாக 3 இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், அஸ்வின் உள்ளிட்ட பல வீரர்களை 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அணியில் இருந்து வெளியேற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 இளம் வீரர்களைத் தக்கவைக்க முடிவு செய்துள்ளதுடன், அதில் ஒருவர் ஆயுஷ் மத்ரே என கூறப்படுகின்றது. அவர் தற்போது சிஎஸ்கே அணியில் துவக்க வீரராக அதிரடியாகவும் ஆடுகிறார். இரண்டு போட்டிகளில் அதிரடியாக விளையாடியதுடன், ஒரு போட்டியில் 48 பந்துகளில் 94 ரன்கள் எடுத்திருந்தார்.
தென்னாப்பிரிக்க இளம் அதிரடி வீரர் டெவால்ட் பிரெவிஸ் தொடர்ந்து அதிரடியாக ரன் குவித்து வருகிற நிலையில், அவரையும் சிஎஸ்கே தக்கவைக்கும் என கூறப்படுகிறது.
அத்துடன், சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட உர்வில் படேலையும் சிஎஸ்கே அணி தக்கவைக்கும் என கூறப்படுவதுடன், அவர் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கின்றார். தனது அறிமுகப் போட்டியிலேயே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரா 11 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்தார்.
மேலும் தோனிக்கு மாற்றாக விக்கெட் கீப்பராக அவரை ஆட வைப்பது குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. எனவே இவர்கள் மூவரையும் சிஎஸ்கே அணி தக்கவைப்பது உறுதி.
இவர்களுடன், சிவம் துபே, காயத்தால் வெளியேறிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் தோனி ஆகியோரைத் தக்கவைக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் தீர்மானிக்கலாம்.
தொடர்து விளையாடுவது குறித்து 2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு தோனி அறிவிப்பார் எனவும் சிஎஸ்கே தெரிவித்துள்ளதுடன், ஒருவேளை தோனி விளையாடாவிட்டால், அதற்கு மாற்று ஏற்பாடாகத்தான் உர்வில் படேலை சிஎஸ்கே அணி இப்போதே தெரிவு செய்து வைத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமது மற்றும் வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது ஆகியோர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதால், இவர்கள் இருவரும் சிஎஸ்கே அணியால் தக்கவைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்குப் மதீஷா பதிரனா பந்துவீசா விட்டாலும், அவருக்கு மீண்டும் ஒரு ஆண்டு வாய்ப்பு அளிக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவெடுக்கலாம்.
மற்ற வீரர்களுக்கு அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக வாய்ப்பு கிடைக்காது என்றும், மற்ற வீரர்களில் ஒன்று, இரண்டு பேரைத்தான் சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சாம் கர்ரன் மற்றும் ஷேக் ரஷீத் ஆகியோரைத் தக்கவைப்பதற்கு வாய்ப்பு உள்ளதுடன், தீபக் ஹூடா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ணா கோஷ், விஜய் சங்கர், ராகுல் திரிபாதி, ஸ்ரேயாஸ் கோபால், டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, முகேஷ் சவுத்ரி, நாதன் எல்லிஸ் மற்றும் ஆண்ட்ரே சித்தார்த் ஆகியோரைத் தக்கவைப்பது நிச்சயம் இலலை.
இவர்களில் அடிப்படை விலையுடன் இருப்பவர்களை சிஎஸ்கே அணி தக்கவைக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அவர்களை நீக்கினாலும் ஏலத்திற்கு அதிக தொகை கிடைக்காது.
எனினும், அதிக சம்பளம் உடைய மற்ற வீரர்கள் நிச்சயமாக ஏலத்திற்கு முன் நீக்கப்படுவார்கள் என்று சிஎஸ்கே தகவல்கள் தெரிவிக்கின்றன.