டி20 தொடரில் ரோஹித் கேப்டன் கிடையாது... அப்போ யார்? வெளியான தகவல் இதோ!

இலங்கை தொடருக்கு முன்பு, இந்தியா மற்றும் ஜிம்பாப்வே இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

டி20 தொடரில் ரோஹித் கேப்டன் கிடையாது... அப்போ யார்? வெளியான தகவல் இதோ!

டி20 உலகக் கோப்பை 2024 தொடர் முடிந்த பிறகு, ஜூலை மாதம், இலங்கை செல்லும் இந்திய அணி, அங்கு தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்று விளையாடும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த இலங்கை தொடருக்கு முன்பு, இந்தியா மற்றும் ஜிம்பாப்வே இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

போட்டிகள் ஜூலை 6, 7, 10, 13, 14 ஆகிய தேதிகளில் நடக்கும். அனைத்து போட்டிகளும், ஹராரேவில்தான் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி, கடைசியாக கடந்த 2022ஆம் ஆண்டில் ஜிம்பாப்வே சென்று மூன்று ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்று, மூன்றிலும் வென்றது.

அதற்குமுன், 2016ஆம் ஆண்டில் ஜிம்பாப்வே சென்ற இந்திய அணி மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்று, அதில் இரண்டு வெற்றிகளை பெற்றிருந்தது. ஜிம்பாப்வேவும் ஒரு வெற்றியை தன்வசப்படுத்தியது. 

டி20 உலகக் கோப்பை 2022 தொடரிலும், இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய நிலையில், அதில், இந்தியா 71 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

திடீரென்று ஜிம்பாப்வே டி20 தொடரை நடத்தக் காரணம் என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெய் ஷா, ''உலக அளவில், கிரிக்கெட்டை வளர்க்க பிசிசிஐ தொடர்ந்து போராடி வருகிறது. 

அந்த வகையில், ஜிம்பாப்வே கிரிக்கெட்டை மீண்டும் புத்துணர்ச்சி பெற வைப்பதற்காகதான், ஜிம்பாப்வே தொடரில் இந்தியா பங்கேற்க முடிவு செய்துள்ளது'' எனக் கூறினார்.

ஜிம்பாப்வே தொடருக்கு முன், 6 நாட்களுக்கு முன்புதான், டி20 உலகக் கோப்பை தொடர் நிறைவுபெற உள்ளது. இதனால், ஜிம்பாப்வே தொடரில், முழுக்க முழுக்க இளம் இந்திய அணிதான் விளையாட உள்ளது. 

டி20 உலகக் கோப்பை 2024 தொடரில், விராட் கோலி, ரோஹித் ஷர்மா போன்ற சீனியர்கள் பங்கேற்க உள்ளனர். ஹர்திக், முகமது ஷமி, சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, கே.எல்.ராகுல் போன்றவர்கள் தற்போது காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஜிம்பாப்வே தொடரில், மூத்த வீரர்களை வைத்து, அவர்களை சிறப்பான முறையில் வழியனுப்பவும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஷிகர் தவன், சஹல், புவனேஷ்வர் குமார் போன்ற சீனியர்களுக்கு இனி வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என்பதால், அவர்கள் இத்தொடரில் விளையாட வாய்ப்புள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...