டாஸ் போடவில்லை.. போட்டி கைவிடப்படுமா? ஐசிசி விதிகள் என்ன சொல்கின்றன?
மழையின் காரணமாக டாஸ் போடப்படவில்லை. கயானா நேரப்படி காலை 10:30 மணிக்கு இந்த போட்டி துவங்கியிருக்க வேண்டும்.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத இருந்த இரண்டாவது இறுதிப் போட்டியில் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு டாஸ் போடப்பட்டிருக்க வேண்டும்.
மழையின் காரணமாக டாஸ் போடப்படவில்லை. கயானா நேரப்படி காலை 10:30 மணிக்கு இந்த போட்டி துவங்கியிருக்க வேண்டும்.
ஆனால், மழையால் டாஸ் தாமதம் ஆன நிலையில் அதிகபட்சமாக மாலை 6.30 மணிக்குள் போட்டியை நடத்தி முடிக்க வேண்டும்.
இந்த அரை இறுதியில் இரு அணிகளும் குறைந்தபட்சம் தலா 10 ஓவர்கள் ஆடியிருக்க வேண்டும். அப்போது தான் மழையால் போட்டி கைவிடப்பட்டாலும் டிஎல்எஸ் முறைப்படி போட்டியில் முடிவு அறிவிக்கப்படும்.
ஏதேனும் ஒரு அணி 10 ஓவர்களுக்கும் குறைவாக ஆடி இருந்தாலும் அப்போது மழையால் போட்டி தொடர முடியாத நிலை ஏற்பட்டால் டிஎல்எஸ் முறையை செயல்படுத்த முடியாது என ஐசிசி விதிமுறை தெரிவிக்கின்றது.
எனவே, அந்த சூழ்நிலையில் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்படும். எனவே, மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டாலும் குறைந்தபட்சம் இரு அணிகளும் 10 ஓவர்கள் பேட்டிங் செய்யும் வகையிலேயே ஓவர்கள் குறைக்கப்படும்.
அந்த வகையில், இந்திய நேரப்படி நள்ளிரவு 1.50 நிமிடத்தில் போட்டி ஆரம்பிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இரண்டு அணிகளும் தலா 10 ஓவர்கள் பேட்டிங் செய்ய முடியும்.
அந்த நேரத்தை தாண்டியும் போட்டி துவங்க முடியாமல் போனால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |