சூப்பர் 8 சுற்றுக்கு சென்றால் இந்திய அணி யாருடன் மோதும் தெரியுமா? ஆபத்தான அந்த மூன்று அணிகள்!
ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் முதல் முறையாக 20 அணிகள் பங்கேற்பதுடன், நான்கு பிரிவுகளாக 5 அணிகள் லீக் சுற்றில் மோதுகின்றன.
ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் முதல் முறையாக 20 அணிகள் பங்கேற்பதுடன், நான்கு பிரிவுகளாக 5 அணிகள் லீக் சுற்றில் மோதுகின்றன.
இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுவதுடன், சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகளாக இரண்டு பிரிவுகளில் போட்டிகள் இடம்பெறும்.
அவ்வாறான நிலையில், இந்திய அணியானது லீக் சுற்றில் அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, பாகிஸ்தான் போன்ற அணிகளை மட்டுமே எதிர்கொள்வதால், இந்திய அணி குரூப் ஏ பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி பிடிக்கும் பட்சத்தில் சூப்பர் 8 சுற்றுக்கு இந்திய அணி சென்றால் எந்தெந்த அணியுடன் மோத போகிறது என்பது பார்க்கலாம்.
2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணி 2009, 2010, 2012, 2021 ஆகிய தொடர்களில் அரையிறுதி சுற்றுக்கு கூட செல்ல முடியாமல் சூப்பர் 8 சுற்றிலேயே தோல்வியை தழுவி வெளியேறி உள்ளது.
அந்த அளவுக்கு சூப்பர் 8 சுற்று மிகவும் கடினமாக இருக்கும் என்பதால், இந்திய அணி 2007, 2014, 2016, 2022 என 4 முறை தான் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது.
இந்த நிலையில், நடப்பு டி20 உலக கோப்பையில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இலங்கை அல்லது தென்னாப்பிரிக்கா என மூன்று பலம்வாய்ந்த அணிகளை இந்தியா எதிர்கொள்ளும் வகையில் அட்டவணை உள்ளது.
இதில் இலங்கை அணியை வீழ்த்தினாலும், ஆஸ்திரேலியா நியூசிலாந்து போன்ற அணிகளுக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றால் மட்டுமே இந்திய அணியானது இறுதி சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.
எனவே, லீக் சுற்றுக்கு பின்னர் வரும் ஒவ்வொரு போட்டியுமே இந்தியாவுக்கு மிகவும் நெருக்கடி நிறைந்த போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |