சிவகார்த்திகேயன் குறித்து இமான் முதல் மனைவி ஓபன் டாக்
முன்னணி இசையமைப்பாளரான டி.இமான் நேர்காணல் ஒன்றில், "இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம். அவர் எனக்கு செய்தது ஒரு மிகப்பெரிய துரோகம். அதை என்னால் வெளியே சொல்ல முடியாது. அதனால் இனி வரும் காலங்களில் அவருடன் சேர்ந்து பயணிக்க இயலாது.
முன்னணி இசையமைப்பாளரான டி.இமான் நேர்காணல் ஒன்றில், "இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம். அவர் எனக்கு செய்தது ஒரு மிகப்பெரிய துரோகம். அதை என்னால் வெளியே சொல்ல முடியாது. அதனால் இனி வரும் காலங்களில் அவருடன் சேர்ந்து பயணிக்க இயலாது.
ஒருவேளை அடுத்த ஜென்மத்தில் நானும் இசையமைப்பாளராக இருந்து, அவரும் நடிகராக இருந்தால் நடக்க வாய்ப்புள்ளது. இது நான் மிகவும் கவனத்துடன் எடுத்த முடிவு. அந்த துரோகத்தை நான் மிகவும் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன். இது குறித்து அவரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டேன். ஆனால் அவரது பதிலை என்னால் சொல்லமுடியாது" என்று கூறினார்.
இதன் பிறகு இமான் விவாகரத்திற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த நேர்காணல் குறித்து இமானின் முதல் மனைவி மோனிகா ரிச்சர்ட் கூறியுள்ளதாவது, சிவகார்த்திகேயனுக்கும் இமானுக்கும் நல்ல நட்பு உண்டு. எங்களுக்கு விவாகரத்து நடக்கக்கூடாதுன்னு பல முயற்சிகளை எடுத்தார். இமானோட விவாகரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் சப்போர்ட் பண்ணவில்லை. அது இமானுக்கு பிடிக்கவில்லை.
ஒரு வருடத்திற்கு முன்னாடி பொண்ணையெல்லாம் பார்த்து வைத்துவிட்டுதான், இமான் எனக்கு விவாகரத்தே கொடுத்தார். நான் முடியாதுன்னு சொன்னதுக்கு, அரசியல்வாதிகளை வைத்து 'உங்கப்பாவைக் கொன்னுடுவோம்'னு மிரட்டல் எல்லாம் கொடுத்து 46 நாட்களிலேயே விவாகரத்தும் வாங்கினார்.
இப்போ, இமானுக்கு பட வாய்ப்புகள் சரியாக இல்லை. அதனால்தான், இப்படியெல்லாம் பேசி பட வாய்ப்புகளை பிடிக்க நினைக்கிறார்" என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |