காற்று வாங்கும் மைதானம்.. எங்கும் காலி இருக்கைகள்.... ரொம்ப மோசம்
சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் அமரக்கூடிய இந்த மைதானத்தில் பத்து சதவீதம் இருக்கைகள் கூட நிரம்பாமல் இருக்கிறது. இதற்கு பிசிசிஐ யின் மெத்தனப் போக்கே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஐசிசி உலக கோப்பையில் முதல் லீக் ஆட்டத்திற்கு பார்வையாளர்கள் வராதது பிசிசிஐயை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அகமதாபாத்தில் நியூசிலாந்தும் இங்கிலாந்தும் நரேந்திர மோடி மைதானத்தில் பல பரிட்சை நடத்தி வருகின்றன.
இந்த போட்டி தொடங்கி இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம் கூட மைதானத்தில் இல்லை. பெரும்பான்மையான இருக்கைகள் காலியாக இருக்கின்றன.
சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் அமரக்கூடிய இந்த மைதானத்தில் பத்து சதவீதம் இருக்கைகள் கூட நிரம்பாமல் இருக்கிறது. இதற்கு பிசிசிஐ யின் மெத்தனப் போக்கே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொதுவாக இங்கிலாந்து விளையாடும் போட்டியை பார்மி ஆர்மி என்று அந்நாட்டு ரசிகர்கள் உலகத்தில் எந்த மூலையில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும் வந்து பார்ப்பார்கள்.
ஆனால் இம்முறை பார்மி ஆர்மியை சேர்ந்த எந்த ஒரு ரசிகரும் இந்தியாவுக்கு வரவில்லை. இதற்கு காரணம் உலகக்கோப்பை தொடருக்கு 10 மாதங்களுக்கு முன்பே அட்டவணையை தயாரித்து விட வேண்டும்.
ஆனால் பிசிசிஐ ஒரு மாதத்திற்கு முன்பு தான் அட்டவணையை தயாரித்தது. மேலும் போட்டியை அடிக்கடி மாற்றி ரசிகர்களை குழப்பம் அடைய செய்தது.
மேலும் போதிய விமான போக்குவரத்து வசதியும் உணவக விடுதி வசதியும் இல்லை. இதன் காரணமாக வெளிநாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு இந்த போட்டியை காண வரவில்லை. சரி உள்ளூர் மக்களாவது வந்து இந்த போட்டியை பார்ப்பார்கள் என்றால் அதற்கான எதிர்பார்ப்பு கொஞ்சம் கூட மக்களிடம் இல்லை.
டிக்கெட்டை பெறுவதற்கான வழிமுறைகள் எளிதாக இல்லாத காரணத்தால் சாதாரண மக்கள் மைதானத்திற்கு வர முடியவில்லை.
மேலும் சிலர் இந்தியா முதல் போட்டிகளில் விளையாடாததால் தான் இது போன்ற நிலை ஏற்பட்டிருப்பதாக கூறி வருகின்றனர். ஆனால் அதுவும் தவறு என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனெனில் 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் முதல் ஆட்டத்தில் இதே நியூசிலாந்தும் இங்கிலாந்தும் இதே அகமதாபாத் மைதானத்தில் தான் விளையாடியது. ஆனால் அந்தப் போட்டிக்கு மைதானம் முழுவதும் பார்வையாளர்களால் நிறைந்திருந்தது.
ஆனால் அப்படி ஒரு நிலை இன்று இல்லை. மேலும் உலகக்கோப்பை தொடர்பாக ரசிகர்களிடம் போதிய விளம்பரத்தை பிசிசிஐ செய்ய தவறியது இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |