2023 உலககோப்பை - முதல் பந்து, முதல் ரன், முதல் விக்கெட் எடுத்தது யார் தெரியுமா? 

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் ஆட்டம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். எப்போதுமே எந்த நாடு கிரிக்கெட் போட்டியை நடத்துகிறதோ அவர்கள் முதல் ஆட்டத்தில் பங்கு பெறுவார்கள்.

2023 உலககோப்பை - முதல் பந்து, முதல் ரன், முதல் விக்கெட் எடுத்தது யார் தெரியுமா? 

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் ஆட்டம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். எப்போதுமே எந்த நாடு கிரிக்கெட் போட்டியை நடத்துகிறதோ அவர்கள் முதல் ஆட்டத்தில் பங்கு பெறுவார்கள்.

இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதுடன் அடுத்த போட்டியை காணவும் மக்கள் மத்தியில் ஆவல் ஏற்படும். ஆனால் இந்தியா போட்டியை ஞாயிற்றுக்கிழமை நடத்தினால் தான் காசு பார்க்கலாம் என பிசிசிஐ மற்றும் ஐசிசி இணைந்து இப்படி ஒரு திட்டத்தை தீட்டிவிட்டது.

அதன்படி கடந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய இங்கிலாந்தும் நியூசிலாந்தும் இன்றைய உலகக் கோப்பை ஆட்டத்தில் விளையாடி வருகிறார்கள். 

ஒவ்வொரு உலகக்கோப்பை முதல் போட்டியிலும் யார் முதல் பந்தை வீசுவார்? யார் அந்த பந்தை எதிர்கொள்வார்? யார் முதல் ரன் அடிப்பார் யார் முதல் விக்கெட்டை வீழ்த்துவார் என்பதெல்லாம் வரலாற்றில் இடம் பெறும்.

அந்த வகையில் இன்றைய ஆட்டத்தில் இந்த வரலாற்றை நீங்கள் மிஸ் செய்து விட்டீர்கள் என்றால் கவலை வேண்டாம். இதோ உங்களுக்காக அந்த தகவல். 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை சச்சின் டெண்டுல்கர் அறிமுகப்படுத்தி வைக்க டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி கேப்டன் டாம் லாத்தம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இதனை அடுத்து நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் தான் முதல் பந்தை வீசினார்.

இந்த பந்தை இங்கிலாந்து வீரர் ஜானி பாரிஸ்டோ எதிர்கொண்டார் முதல் பந்தில் ரன் எதுவும் அடிக்கப்படவில்லை. ஆனால் இரண்டாவது பந்திலே பாரிஸ்டோ சிக்ஸர் அடித்தார். 

இதன் மூலம் இந்த உலக கோப்பையில் முதல் சிக்சர், முதல் ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை பாரிஸ்டோ பெற்றார். இதேபோன்று இந்த தொடரில் முதல் விக்கெட்டை நியூசிலாந்து வீரர் மாட் ஹென்றி எடுத்தார். அவர் இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன் விக்கெட்டை வீழ்த்தினார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...