முதுகில் குத்திய ஹர்திக் பாண்டியாவை கட்டி அணைத்த ரோஹித்... அனைவரையும் கலங்க வைத்த தருணம்!

சூரியகுமார், பும்ரா உள்ளிட்டவர்கள் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாகவும் இஷான் கிஷன் உள்ளிட்ட வீரர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாகவும் உள்ளனர்.

முதுகில் குத்திய ஹர்திக் பாண்டியாவை கட்டி அணைத்த ரோஹித்... அனைவரையும் கலங்க வைத்த தருணம்!

ஐபிஎல் நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒற்றுமை இல்லாமல் விளையாடி வருகின்றது. ரோகித் சர்மா நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாக உடைந்தது.

சூரியகுமார், பும்ரா உள்ளிட்டவர்கள் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாகவும் இஷான் கிஷன் உள்ளிட்ட வீரர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாகவும் உள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சி தொடங்கி ஒரு வாரத்திற்கு பின்பு தான் ரோகித் சர்மா வந்து சேர்ந்தார். அப்போது ஹர்திக் பாண்டியா அவரை வரவேற்றார்.

இந்த நிலையில் குஜராத் அணிக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் கில்லின் விக்கெட்டை விரைவாக வீழ்த்தினால் மட்டுமே வெற்றி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைக்கும் என்ற நிலை இருந்தது.

இந்த நிலையில் சுப்மான் கில் 22 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். அப்போது சாவ்லா, வீசிய பந்தில் கில் அடித்த கேச்சை முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக பிடித்தார். 

இதனை அடுத்து அங்கிருந்து வந்த ஹர்திக் பாண்டியா ரோகித் சர்மாவை கட்டி அணைக்க முயன்ற போது ரோகித் சர்மாவும் அவரை கட்டி அணைத்து தன்னுடைய மகிழ்ச்சியை கொண்டாடினார். 

இதனை பார்த்த ரசிகர்கள் நெகிழ்ச்சிடைந்து விட்டனர். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது தெளிவாகிவிட்டதாக பார்க்கப்படுகின்றது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...