வில்லனா நடிக்கணுமா இத்தனை கோடி... சம்பளத்தை உயர்த்திய விஜய்சேதுபதி!

விஜய்சேதுபதி கடைசியாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருந்தது.

Oct 7, 2023 - 22:37
வில்லனா நடிக்கணுமா இத்தனை கோடி... சம்பளத்தை உயர்த்திய விஜய்சேதுபதி!

விஜய்சேதுபதி கடைசியாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருந்தது.

இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்திருந்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்த பிறகு தொடர்ச்சியாக நடிகர் விஜய்சேதுபதிக்கு வில்லனாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறதாம். 

அதுவும் சிறிய படங்களில் எல்லாம் இல்லையாம் பெரிய பெரிய படங்களில் நடிக்க தான் வாய்ப்பு வருகிறதாம். அந்த வகையில், தற்போது ராம்சரண் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் ஜெஞ்சர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு தன்னுடைய 16-வது திரைப்படத்திற்கு தயாராகி வருகிறார். அந்த திரைப்படத்தில் வில்லனுக்கு சரியான ஒரு பவர்ஃபுல்லான கதாபாத்திரம் இருப்பதால் பவர்ஃபுல்லான ஒரு வில்லன் நடித்தால் நன்றாக இருக்கும் என பட குழு அவரிடம் கூறியுள்ளதாம்.

அதற்கு யோசிக்காமல் இந்த கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதி தான் சரியாக இருப்பார் என்று நடிகர் ராம்சரண் கூறி விட்டாராம். உடனடியாக படக்குழுவும் ராம்சரனுக்கு வில்லனாக ஒரு படத்தில் நடிக்க வேண்டும் விஜய் சேதுபதியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்களாம். படத்தின் கதையையும் அவர் கேட்டுவிட்டு அருமையாக இருக்கிறது. நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என்று கூறினாராம்.

பிறகு படத்தில் நடிக்க சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி கூற அதற்கு விஜய் சேதுபதி பல கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.  அதாவது வில்லனாக நடிக்க வேண்டும் என்றால் 15 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டாராம். 

அதற்கு பல குழுவும் ஒத்துக்கொள்ள அவர் படத்தில் நடிக்க கமிட் ஆகி விட்டாராம்.  வழக்கமாக வில்லனாக நடிக்க 12 கோடியிலிருந்து 13 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த விஜய் சேதுபதி தற்போது படங்களில் வில்லனாக  நடிப்பதற்கு சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.

மேலும் விஜய் சேதுபதி கடைசியாக ஹீரோவாக நடித்த எந்த திரைப்படமும் சரியான  விமர்சனத்தை பெறாத நிலையில், தற்போது ‘மகாராஜா’ எனும் திரைப்படத்தில்  ஹீரோவாக நடித்து வருகிறார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!