Bigg Boss Tamil 7: அபிஷேக்கை விட பயங்கரமான ஆளா இருப்பாரோ கூல் சுரேஷ்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் பிக் பாஸ் சீசன் 7 வீட்டுக்குள் நுழைந்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி வந்த வான்டட் லிஸ்ட் நம்பர் ஒன் நீங்க தான் என முதல் ஆளாகவே கூல் சுரேஷை கூட்டிட்டு வந்துட்டார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமார், சுரேஷ் தாத்தா, அபிஷேக் ராஜா, ஜூலி, காயத்ரி வரிசையில் கூல் சுரேஷ் கன்டென்ட்டுக்கு பஞ்சம் வைக்க மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமல் அறிமுகப்படுத்தும் போது அழுது முதலை கண்ணீர் வடித்து பவ்யமான பிள்ளை போல என்ட்ரியான கூல் சுரேஷ் சில நொடிகளிலேயே கமலிடம் விஸ்வரூபம் பிரச்சனையை பற்றி பேசி ஆண்டவரையே ஆட்டம் காண வைத்து விட்டார்.
அதன் பின்னர் பிக் பாஸ் வீட்டுக்கு செல்லும் முன் வெந்து தணிந்தது காடு கமல் சாருக்கு வணக்கத்தை போடு என்றும் பிக் பாஸ் வீட்டுக்கு வணக்கத்தை போடு என்றும் தனது சிக்னேச்சர் வசனத்தை சொல்லி விட்டு உள்ளே முதல் ஆளாக நுழைந்த கூல் சுரேஷுக்கு எந்தவொரு போட்டியும் வைக்காமல் வந்த உடனே வாய்ப்பை அள்ளித் தருகிறோம் என தலைவர் பதவியை தூக்கிக் கொடுத்துள்ளார் பிக் பாஸ்.
கண்ணாடி டிசைன் போட்ட அறையில் இந்த முறை கன்வெக்ஷன் ரூம் அமைக்கப்பட்டு இருப்பதை முதல் நாளிலேயே காட்டி விட்டனர்.
அபிஷேக் ராஜாவை போல பிக் பாஸ் வீட்டில் அதிகப்பிரசங்கித்தனமாக பேசியே ரசிகர்களை பிளேடு போடப் போகிறாரா? பெண் போட்டியாளர்களிடம் கூல் சுரேஷ் எப்படி நடந்துக் கொள்ளப் போகிறார், சத்தமாக சண்டை போடுவதில் முதல் ஆளாக மாறுவாரா கூல் சுரேஷ் என்று ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |