கேரள நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 50ஆக உயர்வு! இராணுவம் வரவழைப்பு!

கேரள மாநிலத்தில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியும், லேசான நிலச்சரிவும் ஏற்பட்டது. 

கேரள நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 50ஆக உயர்வு! இராணுவம் வரவழைப்பு!

கேரள மாநிலத்தில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியும், லேசான நிலச்சரிவும் ஏற்பட்டது. 

இந்த நிலையில்  இன்று அதிகாலையில் 2 மணியில் இருந்து 4 மணிக்குள் அடுத்தடுத்து மொத்தம் 3 இடங்களில் மிகப்பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டது. 

வயநாடு பகுதியில் உள்ள  சூரல் மலை, மேப்பாடி, முண்டகை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில், அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த மக்கள் மண்ணுக்கடியில் புதைந்தனர். 


 
இரவு நேரம் மற்றும் கன மழை பாதிப்பு காரணமாக மீட்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்க தொடங்கியது. 

இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பலத்த காயங்கள் மீட்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என  அஞ்சப்படுகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...