உலகக்கோப்பை தொடர்.. கடைசி நேரத்தில் ட்விஸ்ட் கொடுத்த ஐசிசி!
இந்தியாவில் 4வது முறையாக ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான அட்டவணை ஜூலை மாத இறுதியில் வெளியிடப்பட்டது.
இந்தியாவில் 4வது முறையாக ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான அட்டவணை ஜூலை மாத இறுதியில் வெளியிடப்பட்டது.
அதில் அக்.5ஆம் தேதி முதல் நவ.19ஆம் தேதி வரை லீக் போட்டிகள் நடக்கவுள்ளது. மொத்தமாக 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் முக்கியமான அக்.14ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
இந்த உலகக்கோப்பைத் தொடரில் அகமதாபாத் மைதானத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அக்.5ஆம் தேதி தொடங்கும் உலகக்கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ளது. அதேபோல் நவ.4ஆம் தேதி இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் போட்டியும், நவ.10ல் தென்னாப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் போட்டியும், நவ.19ல் இறுதிப் போட்டியும் அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ளது.
இதனிடையே உலகக்கோப்பை தொடரின் தொடக்க விழாவும் அகமதாபாத் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடப்பதாக கூறப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ செய்து வருவதாகவும், 10 அணிகளும் கேப்டன்களும் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் தொடக்க விழாவினை "கேப்டன்ஸ் டே" என்றும் அழைக்க பிசிசிஐ மற்றும் ஐசிசி இணைந்து முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் திடீரென ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு எந்தவித தொடக்க விழாவும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் விரல் விட்டு எண்ணும் நாட்களே உள்ள நிலையில், கடைசி நேரத்தில் தொடக்க விழா இல்லை என்ற தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |