இரண்டாவது திருமணம்... மனம் திறந்த நடிகை சமந்தா!

சில வருடங்களுக்கு பிறகு நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரது திருமண உறவில் விரிசல் ஏற்பட்டு 2021ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

Dec 18, 2023 - 12:21
இரண்டாவது திருமணம்... மனம் திறந்த நடிகை சமந்தா!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் நடிகையான நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் சில வருடங்களுக்கு பிறகு நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரது திருமண உறவில் விரிசல் ஏற்பட்டு 2021ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

இது இருவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி பதில் அமர்வில் ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நேரடியாக சமந்தா பதிலளித்தார்.

அதில், மீண்டும் திருமணம் செய்து கொள்ள நினைக்கவில்லையா? என ரசிகர் ஒருவரது கேள்விக்கு பதிலளித்து இருந்த சமந்தா, அது (மறுமணம்) தவறான முடிவாக போய்விடும் என்று புள்ளி விவரங்கள் காட்டுகின்றன என பதிலளித்துள்ளார்.

அத்துடன் 2023 விவாகரத்து தொடர்பான புள்ளி விவரத்தையும் சமந்தா இணைத்து பதிலளித்துள்ளார்.

அந்த புள்ளி விவரத்தில் முதல் திருமணங்கள் 50 சதவீதம் விவாகரத்தில் முடிவதையும், 2வது திருமணங்கள் 67 சதவீதம் மற்றும் 3வது திருமணங்கள் 73 சதவீதம் விவாகரத்தில் முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!