ஆர்.ஜே.பாலாஜியின் ‘சொர்கவாசல்’ டீசர் வெளியானது!

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சொர்க்கவாசல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

Oct 22, 2024 - 11:26
ஆர்.ஜே.பாலாஜியின் ‘சொர்கவாசல்’ டீசர் வெளியானது!

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சொர்க்கவாசல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

வானொலி நிகழ்ச்சிகள் மூலம் நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்ற ஆர்.ஜே. பாலாஜி தமிழ் சினிமாவிற்குள் நடிகராக காலடி எடுத்து வைத்து, தான் நடித்த படங்களில் கவனம் ஈர்த்தார். 

நடிப்பது மட்டும் இல்லாமல், எல்.கே.ஜி., மூக்குத்தி அம்மன் போன்ற படங்களை இயக்கவும் செய்தார். இந்த நிலையில் தற்போது நடிகர் ஆர்.ஜே.பாலாஜி சொர்க்கவாசல் என்ற படத்தில் நடித்துள்ளார். 

இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த சித்தார்த் விஸ்வநாத் இயக்குநராக இந்தப் படத்தில் அறிமுகம் ஆகியுள்ளார். கடந்த 19-ம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது படத்தின் டீசரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!