இங்கிலாந்தில் குளிர்காலம் முன்கூட்டியே ஆரம்பம்: விடுக்கப்பட்டுள்ள கடும் பனி எச்சரிக்கை
இங்கிலாந்து முழுவதும் குளிர்காலம் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே தொடங்கும் என வானிலை அலுவலகம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்து முழுவதும் குளிர்காலம் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே தொடங்கும் என வானிலை அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த வார இறுதியில் ஸ்ட்ராடோஸ்பெரிக் வெப்பமயமாதல் (Stratospheric Sudden Warming – SSW) எனப்படும் திடீர் வளிமண்டல மாற்றம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அடுத்த இரண்டு வாரங்களும் குளிரான மற்றும் நிலைமாறும் வானிலையைத் தூண்டும் என முன்னறிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக கிரேட் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.
படைமண்டலத்தில் (Stratosphere) கீழ்மட்டத்தில் குளிர்ந்த காற்று மற்றும் மேல்மட்டத்தில் சூடான காற்று இருப்பது சாதாரண அமைப்பு. ஆனால் இந்த சமநிலை திடீரென மாற்றமடைந்தால், நிலத்தாழ்வான குளிர் காற்று ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து பகுதிகளுக்கு விரைவாக பரவி, கடும் குளிர் காலநிலையை உருவாக்கும் என்று நிபுணர்கள் விளக்குகின்றனர்.
